ரூபாய் நோட்டு பிரச்சனை தீர இன்னும் 6 மாதம் ஆகும்: வங்கி ஊழியர் சம்மேளனம் தகவல்

2016-01-12-12-04-57l

செனனை: ரூபாய் நோட்டு பிரச்சனை தீர இன்னும் 6 மாத காலம் ஆகும் என்ற உண்மையை மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கோரிக்கை விடுது்துள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகள் பெயரளவுக்கு மட்டுமே வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தற்போதைக்கு பிரச்சனை தீராது என அச்சம்மேளனம் கூறியுள்ளது. செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக தேவைப்படும் பணத்தை அச்சிட 6 மாத காலம் ஆகும் வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு பொது செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் போதிய பணம் இருப்பில் இல்லாததால் பல இடங்களில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மோதல் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தவிர்க்க பணத்தட்டுபாட்டை போக்க நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>