ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம்

ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் தங்கப் பதக்க வேட்டையை தொடங்கிய நாடுகள்

160807051939_olympics_brazil_640x360_reuters

ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃபிரி ஸ்டைல்) 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற சுன் யாங் (சீனா), மார்க் ஹோர்டன் (ஆஸ்திரேலியா), கபிரியேல் டெட்டி (இத்தாலி)

பிரிசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளில், ஆஸ்திரேலியா நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

400 மீட்டர் ஆண்கள் சுதந்திரப் பாணி (ஃப்ரீ ஸ்டைல்) நீச்சல் போட்டியில், போட்டியாளர் சுன் யாங் என்ற சீன வீரரை விட ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் மார்க் ஹோர்டன் தங்கம் வென்றார்.

160807003914_beslan_mudranov_640x360_epa_nocredit

60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற பெஸ்லான் முடிராநோவ் (ரஷியா)
400 மீட்டர் பெண்கள் தொடர் நீச்சல் போட்டியில், உலக அளவில் பதிய பதிவோடு அமெரிக்காவையும், கனடாவையும் தோற்கடித்து ஆஸ்திரேலியா அணியினர் தங்கம் வென்றனர்.

ரஷியாவின் முதல் தங்கப்பதக்கத்தை 60 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் பெஸ்லான் முடிராநோவ் பெற்றிருக்கிறார்.
ஆண்கள் சாலை மிதி வண்டி போட்டியில் பெல்ஜியத்தின் கிரெக் வான் அவர்மயட் தங்கம் வென்றுள்ளார்.

அம்பு எய்தல் போட்டியில் தென் கொரிய விளையாட்டு வீரர்கள் அணியானது அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றிருக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>