ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24 ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு இருந்த பலர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர்.

அப்போது ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளை சுவாதியை கொலை செய்த கொலைகாரர்கள் துரத்தினர் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் நுங்கம்பாக்கம் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் முதலில் தெரிவித்தனர்.

சுவாதி கொலையில் பிலால் சித்திக் மீது சந்தேகம் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரிடம் 4 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் கொலை தொடர்பான ஆதாரங் களைத் திரட்டியுள்ளனர். ஆனால் இது தொடர்பான உண்மையை போலீ ஸார் மறைத்துள்ளனர். சுவாதி கொலை காதல் அல்லது வேறு காரணங்களுக்காக நடந்து இருக்கலாம்.

சம்பவம் நடைபெறுவதற்கு 17 நாட்களுக்கு முன்பாக சுவாதியை அடையாளம் தெரியாத ஒருவர் தாக்கியதைப் பயணி ஒருவர் பார்த் துள்ளார். மதுரை மற்றும் ஒட்டன் சத்திரத்தில் 2 பேரைக் கைது செய் துள்ளதை வெளியே காட்டவில்லை. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை சுவாதி காதல் திருமணம் செய்து மதம் மாறியுள்ளதாக பெங்களூரு சென்ற போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சுவாதி மரணம் குறித்து தன் குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டாம் என சுவாதியின் தந்தை முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்துள்ளார். எனவே சுவாதி குடும்பத்தாரிடம் போலீ ஸார் சரியாக விசாரணை நடத்த வில்லை. சுவாதியை ஒருவர் கடுமை யாக தாக்கியதாகவும், அதை சுவாதி பொறுத்துக்கொண்டதாகவும் சுவாதி யின் தோழி ஒருவர் போலீஸில் கூறியுள்ளார்.

பெங்களூருவில் சுவாதி பணி யாற்றிய இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக் காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது பெங்களூரு சென்ற தனிப்படை போலீ ஸாரின் விசாரணையில் தெரியவந் துள்ளது.

இந்தக் கொலையில் பல உண்மை களை போலீஸார் மறைத்துவிட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கி யுள்ளனர். மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>