ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுப்படகு மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.

post-281

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மீது ஏற்வாடி நாட்டுப்படகு மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச தாக்குதல் நடத்தினர். இந்த பெட்ரோல் குண்டு வீசியதில் 2 விசைப்படகு மீனவர்கள் படுகாயமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்படிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று அப்பாசி என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த ஏற்வாடியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், மண்டபத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு மீது தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீச தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக அந்த படகு நிலைதடுமாறி கடலில் மூழ்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். குண்டு வீசப்பட்ட படகில் இருந்த 2 மீனவர்களுக்கு காலில் தீப்புண் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் மண்டபம் மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்ட படகு மீது மட்டும் பெட்ரோல் குண்டு வீசியதன் காரணம் என்னவென்றால், அந்த படகில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதனால் தான். காயம் ஏற்பட்ட 2 மீனவர்களுக்கு காலில் பலத்த தீப்புண் காயம் ஏற்பட்டதால் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>