ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமி தற்கொலை; சிறுவன் கைது

ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமி தற்கொலை; சிறுவன் கைது

ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமி தற்கொலை; சிறுவன் கைது

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.

முன்னதாக அந்த சிறுமி 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கூலி வேலை பார்க்கும் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இந்நிலையில், அதே வீட்டில் தங்கியிருக்கும் 12 வயது சிறுவன் கடந்த 12ம் தேதி முதல், தொடர்ந்து 4 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த சிறுமியின் உயிர் பிரிந்த 15ம் தேதியும் அவள் பாலிய தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த 12ம் தேதியன்று பள்ளிக்கு செல்லாத அந்த சிறுமி 13ம் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் அன்றைய தினம் மிகவும் சோகமாக காணப்பட்டதாக பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அந்த 12 வயது சிறுவனை, கைது செய்துள்ள போலீசார், அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>