ராகுல் காந்தி எங்கள் தூதர் லூ சவோஹுய்யை சந்தித்தார் சீனா தகவல், காங்கிரஸ் மறுப்பு

201707101024021873_Chinese-Embassy-Says-Rahul-Gandhi-Met-Ambassador-Luo-Zhaohui_SECVPF

புதுடெல்லி,

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. அங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானுக்கு சீனாவுடன் தூதரக உறவு இல்லாததால், இந்தியாவின் ராணுவ பலத்தையே நம்பி இருக்கிறது. பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் அப்பகுதியில் சாலை அமைத்து வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, அவர்கள் சிக்கிம் மாநிலத்துக்குள் புகுந்து, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர்.

சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவம் இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்ததால் அங்கு ராணுவத்தை இந்தியா குவித்து உள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் சீன ராணுவமும் படையை குவித்து இருக்கிறது. இதனால் சிக்கிம் மாநில எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவம்தான் தனது எல்லை பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாக தொடர்ந்து சீனா குற்றம்சாட்டி வருகிறது.

இந்தியா படையை வாபஸ் பெற முடியாது என கூறிவிட்டது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதட்டம் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சீன விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் எந்தஒரு தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

இந்நிலையில் சீன தூதரம் கடந்த 9-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியாவிற்கான சீன தூதர் லூ சவோஹூய்யும் சந்தித்து பேசினர், இந்தியா – சீனா இப்போதைய உறவுகள் குறித்து இருவரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. சீன தூதரகம் செய்தி வெளியிட்டு உள்ளநிலையில் காங்கிரஸ் கட்சி அதனை மறுத்து உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>