ராகிங்கில் ஈடுபட்டால் கடும் தண்டனை வழங்கவேண்டும்: ஆளுநர்

ரகிங்கில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்கள் அந்தச் செயலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா

கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்கள் அந்தச் செயலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா

ரகிங்கில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மற்ற மாணவர்கள் அந்தச் செயலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கை ஒழிப்பதற்கான மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பின் 7ஆவது கூட்டம், அந்த அமைப்பின் தலைவரும், தமிழக ஆளுநருமான கே.ரோசய்யா தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் நடைபெறுவதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதோடு, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான், மற்ற மாணவர்கள் அந்தச் செயலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பார்கள். மேலும், ராகிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதோடு, மாணவர் குழுவில் உறுப்பினராக்குவதன் மூலம் அவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமைச் செயலர் பி. ராம மோகன் ராவ், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், உயர் கல்வித் துறை செயலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>