ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளதுஇந்த போனஸ் அறிவிப்பால் மத்திய அரசுக்கு 2,090 கோடி ரூபாய் செலாவாகும். இதன்மூலம் ஊழியர்கள் 78 நாள் ஊதிய தொகை போனஸாக பெறுவார்கள்.இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

புதுடெல்லி: ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2015-16 ஆம் ஆண்டிற்கு போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் சி மற்றும் டி பிரிவுகளில் பணிபுரியும் 12,50,000 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பால் மத்திய அரசுக்கு 2,090 கோடி ரூபாய் செலாவாகும். இதன்மூலம் ஊழியர்கள் 78 நாள் ஊதிய தொகை போனஸாக பெறுவார்கள் என அமைச்சரவை கூறியுள்ளது.

போனஸ் தொகையை வரும் தசரா பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். மேலும் கடந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.8,975 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>