டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

201712111705227247_Trump-s-sexual-misconduct-accusers-should-be-heard-says-US_SECVPF

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் மீது பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்கள். டொனால்டு டிரம்ப் வலுக்கட்டாயமாக முத்தமிட்டார், தவறான முறையில் நடந்துக் கொண்டார் என பல்வேறு பெண்கள் அவருக்கு எதிராக குற்றம் சாட்டிஉள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக டொனால்டு டிரம்பிற்கு எதிராக 10-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். இவ்விவகாரம் மீண்டும் பூதகரமாகி உள்ளது.

டொனால்டு டிரம்ப் மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ள நிலையில் அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டு என்ற கோரிக்கையையும் எழுந்து உள்ளது.

ஜனநாயக கட்சியை சேர்ந்த இரு செனட் சபை உறுப்பினர்கள் டொனால்டு டிரம்ப் பதவி விலக வேண்டும் என கூறிஉள்ளனர்.

இந்நிலையில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசுகையில், டொனால்டு டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார். பாலியல் பலாத்காரம் தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரிக்கிறார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இப்போது நிக்கி ஹாலேவின் பேச்சு வரவேற்பை பெற்று உள்ளது. பெண்களுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் தாக்குதல் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு, டொனால்டு டிரம்ப் மீது குற்றம் சாட்டிய பெண்கள் உள்பட அனைத்து பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படும் என்றார்.

பாலியல் குற்றம் சாட்டிய பெண்கள் ஒருவர், “டொனால்டு டிரம்ப் நான் 14 வயதாக இருந்த போதே பாலியல் உறவை வைத்துக்கொள்ள முயற்சி செய்தார்,”என குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் டொனால்டு டிரம்ப் தரப்பில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

நிக்கி ஹாலே மேலும் பேசுகையில், ‘பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் பெண்கள் வெளியுலகத்துக்கு வருவதை வெகுவாக பாராட்டுகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

பெண்களின் வலிமையையும், தைரியத்தையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அரசியல், சினிமா மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்க இது சரியான தருணம் என நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>