எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ரஜினி அவர் கருத்தை கூறியிருக்கிறார்
. வருங்காலத்தில் மக்கள் பிரச்சனைகளை எப்படி ஈடுபாட்டுடன் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே யாரின் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது தெரியும்.
ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் நாங்களும் அதே கருத்தை தான் கூறுகிறோம்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.
மற்ற தலைவர்கள் பேசுவது பதியப்படுவதில்லை என தமிழிசை தெரிவித்தார். பல மாநிலங்களில் நல் ஆட்சியை பாஜக கொடுத்துள்ளது நம்பிக்கைதான் வாழ்க்கை. அவரவர் பணியை அவரவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்மற்றவர்கள் யாரும் சரியில்லை என்ற தொணி சரியாக இருக்காது. பாஜகவிற்கு மாற்றாக எந்த அணியும் வெற்றி பெற முடியாது. மம்தா ஸ்டாலினுடன் பேசினால் காங்கிரசுடனான கூட்டணி என்ன ஆனது. திரைப்பட துறையில் இருப்பதால் அவருக்கும் கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை என்று கூறினார்