ரஜினியால் எடப்பாடி ஆட்சி கவிழும்: தமிழருவி மணியன்

22-1495443822-rajini566657

தமிழருவி மணியன் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொது வாழ்வின் புனிதத்தைப் பாழ்படுத்தி, ஊழலுக்கு அன்றாடம் உற்சவம் நடத்தி, மக்கள் நலன் சார்ந்த அரசியலை இழிந்த தொழிலாக உருமாற்றி, அரசியல் அமைப்பு முறையை முற்றாக அழுகும் நிலைக்கு மாற்றிவிட்ட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ஆகிய திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கும் வேள்வியில் காந்திய மக்கள் இயக்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால், ஊழல் பொது வாழ்வின் தவிர்க்க முடியாத தீமையாகத் திசையெங்கும் வியாபித்துவிட்டது.

இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் எடப்பாடி அமைச்சரவை உட்கட்சிக் குழப்பங்களால் கோட்டையிலிருந்து வெளித்தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக நலனுக்கு எதிரானது என்ற உணர்வு மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இரு திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி முறையைப் பார்த்துப் பார்த்து மனம் சலித்துக் கிடக்கும் மக்கள் அரசியல் அரங்கில் நல்ல மாற்றம் ஒன்று நிகழாதா ? நம்மை இரட்சிக்கும் ஒரு நல்ல தலைமை வந்து வாய்க்காதா? என்று ஏங்கித் தவமிருக்கும் சூழலில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து ஊழலின் ஆணிவேரை அறுத்தெறிவதற்கு உறுதி பூண்டிருக்கிறார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்? அவரால் தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழக் கூடுமா? அவரால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லரசியல் எப்படி அமைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருவதற்காகவும், ரஜினியின் அரசியல் வருகைக்கு அடித்தளம் அமைப்பதற்காகவும் காந்திய மக்கள் இயக்கம் ஆகஸ்ட் 20 அன்று திருச்சி உழவர் சந்தைத் திடலில் மாபெரும் மக்கள் திரள் மாநாட்டை நடத்த இருக்கிறது. காந்திய மக்கள் இயக்கத் தொண்டர்களும், ரஜினியை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நெஞ்சங்களும், ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த பொது மக்களும் திரளாகக் கூடவிருக்கும் இந்த மாநாட்டின் முடிவிலிருந்து எடப்பாடி ஆட்சி கவிழ்வதற்கான அரசியல் திருப்புமுனை தொடங்கவிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>