யூமா வாசுகி : நேர்காணல்: முத்தையாவெள்ளையன்

யூமா வாசுகி :  நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன்

மனித சமூகத்தின் வளரச்சியின் உச்சம்தான் கலை                                யூமா வாசுகி 

நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன் 

vietnam_hoi_an_bikes_81   உனக்கும் உங்களுக்கும், தோழமைஇருள், இரவுகளின் நிழற்படம், அமுத பருவம், வலம்புரியாய் அணைந்த தொருசங்கு ஆகியகவிதை தொகுதிகள், உயிர்த்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பு, இரத்த உறவு என்ற நாவல்.  Morning Thickets என்ற ஓவியங்களின் தொகுப்பு ஆகிய வற்றின் பாடைபாளி. மலையாளத்திலிருந்து11 சிறுவர் நூல்களைமொழிபெயர்த்தவர்.

இரண்டு இதழ்களே வந்த மழை இதழின் ஆசிரியர். விட்டு விட்டு வந்தாலும் விடாமல் எட்டு இதழ்களாகவரும் குதிரைவீரன் பயணம் இதழின் ஆசரியர் குழுவில் ஒருவர்

தமிழ்நாடு அறிவியல்இயக்கத்தின் இதழான துளிர் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்கணையாழி, புதியபார்வை போன்ற இதழ்களில்பணியாற்றியவர்,

இவர் எழுதிய இரத்த உறவு நாவலும், இரவுகளின் நிழற்ப்படம் என்ற கவிதை நூலும் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றவை.

மரகத நாட்டு மந்திரவாதி என்ற சிறுவர் இலக்கிய நூலுக்காக தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் மற்றும் என்.சி.பி.எச்வழங்கிய மொழிமொழிப்பெயர்ப்புக்கான தொ.மு.சி. ரகுநாதன் விருதை பெற்றவர்.

 

 

    யூமா வாசுகி :  நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன்

உங்கள்முதல்கவிதைதொகுப்புப்பற்றி...  

 

உனக்கும் உங்களுக்கும் என்ற கவிதைத்தொகுப்புத்தான் முதலில் வந்தது. அப்போது கும்பகோணம் அரசு ஓவியக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தநேரம். தீவிரமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தேன்.

அவை கவிதை குறித்து எதுவும் தெரியாமல் பொதுவான ஆர்வத்தால் உந்தப்பட்டு எழுதப்பட்டவை.

சேர்ந்த60, 70 கவிதைகளில் இருந்து தேர்வுசெய்து ஒரு தொகுப்பு கொண்டுவர நானும், என் நண்பன் அறிவுச்செல்வனும் விரும்பினோம்.

கையில்காசு இல்லை. அறிவுச்செல்வனின் அக்காவின் செயினைவாங்கி இதற்க்காக விற்றோம்.

இந்த தொகுப்பைக்கொண்டு வர இரண்டாயிரம் ரூபாய் செலவானது. ஏதோ அவசர தேவைக்கு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். திரும்பக்கொடுத்து விடுவார்கள் என்று நினைத்துஇருந்தார் அந்த அக்கா.

 

ஆனால் அப்படி நடக்கவில்லை அவரும் இறந்துவிட்டார். என் ஒவ்வொரு கவிதையும் என்பிரியமான அந்த செல்வி அக்காவிற்கு கடமைப்பட்டவை.

 

யூமா வாசுகி :  நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன் ” உனக்கும் உங்களுக்கும்”தொகுப்பில்ஒருமுன்னுரை எழுதி இருந்தேன் ஆசிரியரைகுறித்தும், அந்த புத்தகத்தின் விஷயங்களைக் குறித்தும் வெகுவாக சிலாக்கித்து எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான  முன்னுரைகளைப் படித்ததினால், ஒருஎதிர்ப்பு உணர்வில் எழுதப்பட்ட முன்னுரைதான்அது.

இதில் என்னைநானே அதிகேவலமான மனிதனாக சித்தரித்திருப்பேன். அதாவது நான் மொடக்குடிகாரன் போல, பல்வேறு விலைமகளிருடன் உறவுவைத்திருப்பதுபோல்.இப்படி எல்லாம் அந்த முன்னுரையில் வரும்.

 

அந்த புத்தகம் வந்தபோது ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியரிடம் எப்படியோ அந்தப் புத்தகம் அகப்பட்டு விட்டது. அவர் உடனடியாக என்னை அழைத்துசொன்னார் நீங்கள் இது போன்ற நபராக இருப்பது பற்றி பிரச்சனை இல்லை. அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் இப்படிபட்ட ஆட்களை நாங்கள் வேலைக்கு வைத்துக்கொள்ளமாட்டோம் என்று என்னை வெளியேற்றினார்கள்.

 

குமுதத்தில் சுஜாதா ஆசிரியராக இருந்தபோது அந்தமுன்னுரையை அப்படியே பிரசுரித்தார்.

 

அது குறித்து எனது முகவரிக்கு நிறைய கடிதங்கள் வந்தன. என்னைக் காந்தியைப் போன்று அப்பட்டமான நேர்மையாளனாகச் சித்தரித்தும், மகா இழிந்தவனாக் குற்றம் சாட்டியும் கடிதங்கள்வந்தன.

 

விருதுநகரிலிருந்து ஒருபெண்கடிதம் எழுதியிருந்தார் நான் பார்பதற்கு வறுமையாக இருப்பேனே தவிர,  அழகாகஇருப்பேன். நான்   சொல்வதைப் புரிந்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்  என்று அக்கடிதத்தில்கு றிப்பிடப்பட்டிருந்தது.  அந்தக்கடிதத்தை வெகுநாட்கள் ஒளித்துவைத்துப் படித்து  கிளுகிளுப்பு அடைந்தேன் .

 

 

யூமா வாசுகி :  நேர்க்கானல்: முத்தையாவெள்ளையன் எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கிபோன்றவர்கள்உனக்கும்உங்களுக்கும்  தொகுப்பில்  நல்ல  அம்சங்களை தொட்டுக் காட்டினர்கள். சி.மோன்தான்என்னைக்கவிஞனாகஉருவாக்கினார்.

 

 

                    கவிதைஎழுதுவதற்கானமனநிலை…                                                                                                                                                                                                             (மனநிலை வளரும்…..)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>