யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

ஒரு விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோம், நம்முடைய அனுபவ சாராம்சத்திலிருந்து, ரசனைநுட்பத்திலிருந்து, அதற்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த இடம் தான் ஒரு படைப்பாக மாறும் இடம்.

@ கவிதை எழுதுவதற்கான மனநிலை…

அது வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது. மிக நெருக்கடியான ஒரு சூழலில், நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்து கூட்டத்தில் பிதுங்கி பயணம் செய்யும் போது என் கவிதை வெளியில் மிக சுதந்திரமாக நான் பிரவேசித்து இருக்கிறேன்.

அந்த நெருக்கடியிலும் என் கவிதை இயல்பாகப் பின்னியபடியே பயணித்து இருந்திருக்கிறேன். அதே சமயம் என் நீண்ட, மிக ஏதுவான, எந்த தொந்தரவு இல்லாத ஒய்வுகளில் என்னால் எதுவும் எழுத முடிந்ததில்லை.

லௌசீக சிந்தனையுடன் சிந்தனைகளுடன் தாஸ்தயேவ்ஸ்கி சாலையில் சென்று கொண்டிருக்கிறபோது, அந்தக் கவித்துவத்தின் படைப்பு மனநிலையின் மந்திரக்கோல் பிரக்ஞையில் பட்டமாத்திரத்திலேயே உயர்வான படைப்பு எழுச்சி நிலைக்கு ஆட்படுகிறார்… அப்படிக்கு ஒரு குறிப்பு வெண்ணிற இரவுகளில் வருகிறது.

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

கலைஞர்களின் ஆளுமைப் பண்பு மனித சமூகத்தின் வளர்ச்சியின் உச்சம் தான் கலை.

கவித்துவத்தின் பறவை இடையறாது மாந்திரீகத்தில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அது நம் தோளடையும் தருணத்தை நாம் நிதானிக்க இயலாது. புடைப்பு மனநிலை என்பது முற்றிலும் அரூபம் சார்ந்தது. ஒருவித மாயத் தன்மையுடனும் எல்லையற்ற சுதந்திரத்தோடும்தான் படைப்பின் மனநிலை இயங்குகிறது.

இந்த மனநிலையை தக்கவைத்துக்கொள்வதில் தான் அகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் ஓரத்தில் கல்லில் அமர்ந்து அழுதப்படியே என் சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன். மனநிலை வாய்ப்பது என்பது மிக முக்கியமானதாகும்.

பாரதியார் கூட சில வருடங்கள் எட்டயபுரம் மகாராஜவின் விருந்தினராக இருந்தபோது எழுதாமல் இருந்திருக்கிறார்.

சுந்தரராமசாமி போன்றவர்களும் பல வருடம் எழுதாமல் இருந்திருக்கிறார்கள்.
அக சாதாரண அற்பவிஷயம் கூட படைப்பு மனநிலையைப் புரட்டி போட்டு விட முடியும்.

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

பழக்கப்பட்ட டீ குவளை காணாமல் போனால் கூட படைப்பாளிக்கு மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. ஊயிர் கொல்லும் மனவதையில் இருக்கும் போது படைப்பிலே அற்புதங்கள் துலங்கலாம். அதற்கு முரணாகவும் இருக்கலாம்.

@ கவிதையில் பாடுபொருள் எது என்பதை எப்படித் தீர்மானிக்க முடியும்?

அண்டசராசரத்தில் உள்ள அத்தையுமே பாடுபொருள்தான். இதில் எனக்கு சந்தேகமே இல்லை. இதில் அடிப்படையானது நம்முடைய நோக்குதான்.

ஒரு விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோம், நம்முடைய அனுபவ சாராம்சத்திலிருந்து, ரசனைநுட்பத்திலிருந்து, அதற்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த இடம் தான் ஒரு படைப்பாக மாறும் இடம்.

@ இல்லை… பாடுபொருள் என்கின்ற விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தீர்மானிக்கிறார்கள். நீங்கள் எதைப் பாடு பொருளாக வைத்துக் கொள்ள முடியும் என்று தீர்மானிக்கிறீர்கள்…

கவிதை என்னிடம் அதன் முதல் தீண்டல்களை உணர்த்துகின்ற சந்தர்ப்பம், பிறகு அது வளர்து வருகிற சூழல். இவை இரண்டுமே பாடுபொருளைத் தீர்மானிக்கின்றன்.

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

அதாவது கவிதையின் முதல் பொறிக்கும் அது உருபெற்று வெளியேறுவதற்குமான இடை வெளியில் தான் பாடுபொருள் தீர்மானமாகிறது. இதைப் பற்றித்தான் எழுதியாக வேண்டும் என்று யாருமே கவிதையிடம் சொல்ல முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது சகல கணக்கீடுகளுக்கும் அற்புறத்தில் நிற்கிறது.

@ சங்க கவிதைகள், பிறகு புது கவிதைகள் என்று… புது வடிவங்களும் பரந்துபட்ட வாசிப்புகளும் தோன்றின. நவீனக் கவிதைகளில் வடிவமாற்றம் பெரியதாக இல்லை என்றே தோன்றுகிறது. வாசகனுக்கு வாசிப்பதில் சிக்கல் இருக்கிறது, இந்த சிக்கல் மொழியால் அல்லது வடிவத்தால் ஏற்படுகிறதா?

இலக்கியக் கோட்பாடுகள் என்பதை இறுக்கமாக அணிந்துக் கொள்வதில் எனக்கு இசைவு இல்லை.

ஓலைச் சுவடிகளில் எழுதிய காலத்தில் எழுது பொருட்கள் குறைவு. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அன்னமும் அதே பாணியை ஏன் விடாப்பிடியாகப் பின்பற்றுகிறோம் என்று தெரியவில்லை. கவிதை என்பது தான் பிரபஞ்சத்தின் சுதந்திரம். கவிதையுடனான உரையாடல் அதே சுதந்திரத்துடன் நிகழ வேண்டும். முதலில் பென்சிலால் எழுவது, பேனாவால் எழுவது பிறகு நான்கு, ஐந்து முறை திருத்தி திருத்தி பிரதி எடுப்பது போன்ற நடவடிக்கைகளின் அளவு கடந்த ஜாக்கிரதைத்தனம் ஒரு வகையில் கவிதார்த்தத்தின் எதிர்நிலையில் இருக்கிறது.

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

இறுக்கமான வடிவமாக மட்டும்தான் கவிதை இருக்க வேண்டுமா? நம் அகத்தின் வாழ்வுதானே கவிதை. அதில் பிசிறு இல்லாமல் இருந்துவிட முடியுமா?அளவு கடந்து செதுக்கிச் சீர் செய்வதன் மூலம் கவிதையை அதற்கு முரணாக மாற்றுகிறோம்.

கவிதை எப்போதும் கவிதை தான். சங்க இலக்கியமாக இருந்தாலும், நவீன கவிதையாக இருந்தாலும்.
சங்க இலக்கிய கவிதைகளையும், நவீன கவிதைகளையும் படித்து தொகுத்த நண்பர்கள், சங்க இலக்கியத்தை கவிதை தரத்தை நவீன கவிதை எட்டவில்லை என்று கூறுகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் உள்ள அதி நுட்பமான கவிதைகள் உதாரணம் காட்டி பேசும் போது நமக்கு மிகவும் அச்சிரியமாக இருக்கிறது.

சங்கத்தையும், நவீனத்தையும் ஒப்பிட்டு ஆரயா வேண்டிய பணி மிகவும் முக்கியமானது. சமிப கால கவிஞர்கள் தங்கள் இயக்கத்திற்காக அபாரமான கவிதைகள் மனநிலையின் மேல் அடுக்குகளில் உள்ள கசடுகளை ஊடுருவி உள்ளார்த்தமான ஸ்படிக நீரோடையைத் தொடும் கவிதைகள், மிகச் சமீபத்தில் பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகளை வாசித்தது அரிய அனுவபம்.

@ திரும்பவும் வாசிக்கிற தன்மைக்குத்தான் வரவேண்டியிருக்கு. கவிஞனும், வாசகனும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயமில்லை என்பதுதான் இன்றைக்கு நவீன கவிதையுடைய நிலைமையாக இருக்கிறது.

வாசகன் படைபாளியின் பார்வையை அடியொற்றி வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

அணுகுமுறை இரண்டு விதங்களில் சம்பவிப்பதாக இருக்கலாம். படைப்பாளி தன் படைப்பில் மிக உயர்ந்த விஷயத்தை ஸ்தாபித்த நிலையில் வாசகன் மிக எளிமையாகவும், மிக திரிபாகவும் புரிந்துகொள்ள நேரலாம்.
மற்றொன்று, படைப்பாளி கருதியிருந்த விஷயத்தை விடவும், படைப்பு தன்னுள் பொதிந்து கொண்டிருக்கிற வீரியத்தை விடவும் மேலதிகமான உயரத்திற்கு அதை வாசகன் தன் நோக்கால் எழுப்பச் செய்யலாம்.

படைப்பிலக்கியம் அனைத்திற்கும் இது பொருந்தும். படைப்பு பல்வேறு பரிமாணங்கள் கொண்டது என்பதே நவீன கலையின் போக்குவழி. இந்நிலையில் ஒரு கோட்டில் இருவரும் பயணிப்பது என்பது நடக்க இயலாதது.

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

யூமாவாசுகி:நேர்காணல்:முத்தையா வெள்ளையன்/ 02

ஓர் ஓவியத்தை சமீபிக்கும் போது ஒவியத்தின் நுட்பங்களுடன் சிறிதாவது பழகிய அனுபவம் வேண்டும். எழுத்தில் வாசிப்பு அனுபவமே பிரதானம். இது இல்லாமல் ஒரு படைப்பு எடுத்த எடுப்பிலேயே தன்னை அப்பட்டமாக இனம் காட்டிக்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

படைப்பும், படைப்பாளியும் உறவுக் கொண்டு ஒரு போலச் செழுமை பெற வாசக தளத்திலிருந்து முயற்சிக் கோரப்படுகிறது.

@ நவீன ஓவியம் என்பதே அந்நியத் தன்மையில்தான் இருக்கிறது. நாவல், சிறுகதை போன்ற வடிவங்களை அனுகுவது சுலபம், ஓவியத்தின் தன்மையிலே கவிதையும் வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நவீன ஓவியம், நவீன இலக்கியம் இரண்டுமே மேற்கத்திய தாக்கத்தினால் விளைந்தவை தான்.

ஓவியமாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும் இன்ன பிற கலை வடிவங்கள் எதுவாக இருந்தாலும் அதன் கவிதார்த்த உட்கிடையிலேயேதான் அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

இறைமையின் வடிவங்களை பல்வேறாகச் சொல்வது போல கவிதுவத்தின் சாரங்கள் எனக் கலை வடிவங்களைக் காணலாம்.

@ கவிதை, சிறுகதை, நாவல் என்று ஒரு படைப்பாளி பயணம் செய்வதை வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாமா?
இது வளர்சி இல்லை. இயல்பு. ஓவியன் வான்கா மிகப்பெரிய இலக்கிய தாகம் கொண்டவன்.

அவன் சகோதரன் தியோவிற்கு எழுதிய கடிதங்கள் எல்லாம் இலக்கிய பதிவுகள் தான்.

இது கலைஞர்களின் ஆளுமைப் பண்பு மனித சமூகத்தின் வளர்ச்சியின் உச்சம் தான் கலை.

அதற்கு மேல் எப்படி வளரமுடியும்? கலைஞனுக்கு கலை என்பது தகுதி கிடையாது. அவனுக்கான வாழ்க்கை முறை அது.

அவன் ரசவாதி. கூடுவிட்டு கூடுபாய்பவன். கடவுளைப்போல அனைத்திலும் நிறைந்து இருப்பான்.

(மனநிலை வளரும்…..02)

இந்த பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்

விளம்பரம்

இந்த பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>