யுனெஸ்கோ வரைவு பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை :மு.திலிப்

சுண்ணாம்பு, சிரட்டைக்கரி, இளநீர், பதநீர், கருப்புகட்டி, முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்டவைகளால் இந்த கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் பெரும்பாலும் சுடுகற்களால் கட்டப்பட்டவை. அதனால் பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சுண்ணாம்பு, சிரட்டைக்கரி, இளநீர், பதநீர், கருப்புகட்டி, முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்டவைகளால் இந்த கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் பெரும்பாலும் சுடுகற்களால் கட்டப்பட்டவை. அதனால் பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. வேணாட்டு மன்னர்களின் தலைநகராக பத்மநாபபுரம் அமைந்த போது கட்டப்பட்ட அரண்மனை 400 ஆண்டுகளை கடந்த பிறகும் கம்பீரமாக உள்ளது. கேரள அரசின் தொல்லியல் துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த அரண்மனை உள்ளது. உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் இடம் பெற முயற்சித்ததின் விளைவாக யுனெஸ்கோவின் வரைவுப்பட்டியலில் இடம் பெற்றது. பத்மநாபபுரத்தில் 185 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி கோட்டை உள்ளது. இந்த வளாகத்தில் 6.5 ஏக்கர் நிலத்தில் அரண்மனை அமைந்துள்ளது. அரண்மனை 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ரவிவர்மா குலசேகரன் பெருமாள் காலத்தில் கி.பி 1601ல் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

முதலில் தாய்கொட்டாரம் அவிட்டம் திருநாள் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டியதாக கூறுகின்றனர். தாய்கொட்டாரத்தை தர்ப்ப குளங்கரை என்று மலையாளத்தில் அழைப்பதுண்டு. இரண்டு மாடிகளை கொண்ட இந்த கொட்டாரம் நிலவறை, குகை வழி, ஏகாந்த மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாலுகெட்டு என்ற கேரள கட்டிட அமைப்பில் உள்ளதால் நான்கு அறைகளை கொண்டு, திறந்த வெளியுடனான நடுமுற்றத்துடன் அமைந்திருக்கிறது. நவீன திருவிதாங்கூரின் மன்னராக அழைக்கப்படும் மார்த்தாண்டவர்மா காலத்தின் போது 1750ல் உப்பரிகை மாளிகை எனும் பல அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த உப்பரிகை மாளிகை 4 அடுக்குகளுடன் உள்ளது. தரை தளத்தில் கருவூலம், முதல் தளத்தில் 64 மூலிகை மரங்களை கொண்ட கட்டில், இரண்டாவது தளத்தில் மன்னரின் விரத கால ஓய்வறை, 3ம் தளத்தில் பச்சிலை ஓவியங்கள், உடைவாள் ஆகியன அமைந்துள்ளன.

2, 3வது தளங்களில் நான்கு பக்கமும் வராண்டாக்கள் அமைந்துள்ளன. முழுக்க, முழுக்க விலை உயர்ந்த மற்றும் காட்டு மரங்களால் இணைக்கப்பட்ட அரண்மனையின் சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகள் காங்கிரீட் போன்று நன்கு பலமான கலவையால் அமைக்கப்பட்டதாகும். சுண்ணாம்பு, சிரட்டைக்கரி, இளநீர், பதநீர், கருப்புகட்டி, முட்டையின் வெள்ளைக்கரு உள்ளிட்டவைகளால் இந்த கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் பெரும்பாலும் சுடுகற்களால் கட்டப்பட்டவை. அதனால் பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும். அரண்மனையில் வரவேற்பரை (பூமுகம்), மந்திரசாலை, பிலா மூட்டில் கொட்டாரம், வேப்பின்மூடு கொட்டாரம், தாய்கொட்டாரம் (பழைய அரண்மனை), சமையலறை, உணவு கூடம், சடங்கு பிரார்த்தனை கூடம், உப்பரிகை மாளிகை, ஆயுத அறை, சந்திரவிலாசம், இந்திரவிலாசம், நவராத்திரிமண்டபம், லட்சுமிவிலாசம், தெக்கே கொட்டாரம், தாழ்வாரம் ஆகிய கட்டிடங்கள் இணைந்துள்ளன.

நாலுகெட்டு அமைப்பு என்ற கேரள கட்டிட பாணியில் அமைந்துள்ள அரண்மனையானது மரங்களால் இணைக்கப்பட்டுள்ளது. பக்கச்சுவர்கள், மேற்கூரை என மரங்களின் ஆதிக்கமும், சிற்ப வேலைப்பாடுகளும் அதிகமாக இருக்கும். கடைசல் இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கலை நுணுக்கமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் வெளிநாட்டு பயணிகளின் மனதை கவர்கின்றன. இங்குள்ள நவராத்திரி மண்டபம் முக்கியமானது. விஜயநகர பேரரசின் கலைநயத்தில் ஒற்றை தூண்கள் தாங்கி பிடிப்பது போல் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் நடன, இசை, நிகழ்ச்சிகள் நடை பெற்றதுண்டு. பாரம்பரிய மர கட்டிடக்கலையை பறைசாற்றும் விதத்தில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தச்சு தொழில் நுட்பத்தின் முன்னோடியாகவும் இந்த அரண்மனையை கருதுகின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்கள் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை இடம் பெறுவற்கான முனைப்பில் உள்ளது.

உலகம் முழுவதும் பெருமை சென்றடையும்
தென் ஆசியாவின் மரக் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக காட்சிதரும் பத்மநாபபுரம் அரணமனையானது யுனெஸ்கோவின் பாரம்பரியமிக்க தலம் பட்டியலில் இடம் பெறும் நிலையில் அதன் பெருமை உலகம் முழுவதும் சென்றடையும். யுனெஸ்கோவின் சிறப்புநிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும். ெதன் தமிழகம் இதனால் சிறப்புறும். அரண்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாக்கப்படும். அரண்மனையால் பத்மநாபபுரம் நகரம் சிறந்தோங்கும். அரண்மனையின் வரலாறு, பாரம்பரியம் சர்வதேச நிலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>