யார் வேண்டுமானால் ஆட்சியை விமர்சனம் செய்யலாம்.தினகரன்

modinithish_18178_19225_17541

அணிகள் இணைப்பு, தினகரன், ஜெயக்குமார், சஸ்பென்ஸ், கமல், சுற்றுபயணம், அதிமுக
சென்னை: இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள். அனைத்தையும் விரிவாக சொல்கிறேன் என தினகரன் இன்று நிருபர்களிடம் பேசுகையில் சஸ்பென்ஸ் வைத்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டிவிவரம் : தொண்டனாகவும், துணை பொது செயலராகவும் பணியாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. தமிழகம் முழுதும் சுற்று பயணம் செய்து கட்சியை பலப்படுத்தவும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறவும் முயற்சி செய்வேன்.

அணிகள் இணைப்புக்கு அவகாசம் வழங்கினேன். ஆனால், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பொது செயலர் செயல்பட முடியாத நிலையால், அவரது பணிகளை துணை பொதுசெயலாளர் என்ற முறையில் செயல்பட வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். கட்சியின் நலன் கருதி எனது நடவடிக்கை இருக்கும். வரும் 4ம் தேதி எனது திட்டங்கள் அனைத்தையும் விரிவாக விளக்குவேன். அனைத்தையும் விரிவாக விளக்குவேன். இன்னும் 2 நாள் பொறுத்திருங்கள்.

ஜெயக்குமார் பல கருத்துகளை சொல்கிறார். அவர் எனது நண்பராக இன்று வரை பார்க்கிறேன். கமல் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானால் ஆட்சியை விமர்சனம் செய்யலாம். ஆனால் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை வைக்க வேண்டும். கமல் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பவர். அவர் சிந்தித்து பேச வேண்டும். பிறர் சொல்லும் குற்றச்சாட்டை அமைதியாக கேட்டு ஒருமையில் விமர்சிக்காமல் அரசியல் ரீதியாக அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.

மக்களின் நலன் அனைத்தையும், மத்திய அரசிடம் கேட்டு தமிழக அரசு பெற்று தர வேண்டும் என்பது எனது கோரிக்கை. காஸ் மானியம் ரத்து மக்களை பாதிக்கும். அதனை மறுபரீசீலனை செய்து மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்பதும், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்று தான். நான் யாருக்கும் போட்டியாக இருக்க மாட்டேன். மற்றவர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என எண்ணாமல், எனது பணியை செய்வேன். நான் ஒதுங்கி இருக்க வேண்டும் என சிலர் பயம் காரணமாக பேசினர்.இதிலிருந்து மீண்டு வருவார்கள். அவர்கள் சொன்னது பொய் எனவும், சிலர் பயம் காரணமாக என்னை ஒதுங்கியிருக்க சொன்னார்கள் என்ற உண்மை தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>