ம.பி மந்த்சூரில் மேலும் ஒரு விவசாயி பலி

693828532jakkamma news

மந்த்சூர் : மத்திய பிரதேச மந்த்சூர் மாவட்டத்தில் போலீசார் தாக்கியதில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்தியபிரதேச விவசாயிகள் தங்களது பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 6ம் தேதி மந்த்சூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதற்கிடையே கலவரம் பாதித்த மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள படவன் கிராமத்தில் விவசாயி ஒருவர் மர்மமாக இறந்தார். இது தொடர்பாக அந்த பகுதி விவசாயிகள் போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், `விவசாயி கனஷியாம் தாகத்(26) நேற்று மாலை கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அவரை வழிமறித்த போலீசார் சரமாரியாக லத்தியால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனஷியாம் இறந்தார்’ என தெரிவித்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>