மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி:மணீஷ் திவாரி

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி:மணீஷ் திவாரி

மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி:மணீஷ் திவாரி

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சி செய்கிறது. இதற்கு மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியே காரணமாகும் என காங்கிரஸ் சாடியுள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் ஏராளமான இளைஞர்கள் பலியாயினர்.

காஷ்மீர் விவகாரத்தை பாஜ தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் கையாள தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

காஷ்மீர் விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏராளமான பல்டிகள், சொதப்பல்கள், சறுக்கல்கள் என கொள்கையில் தடுமாறி வருகிறது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் சறுக்கலை சந்தித்துள்ள பிரதமர் மோடி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் உடனான வெளியுறவில் ஒருங்கிணைந்த கொள்கைை ய உருவாக்க மோடி தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயக அரசு தவறிவிட்டது. மத்திய அரசு தேசிய பாதுகாப்பு விவகாரத்தை மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளதையே இந்த சறுக்கல்கள் காட்டுகின்றன.

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி காரணமாகவே காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சி செய்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தலையிட்டு வரும் பாகிஸ்தானுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

முன்பை விட தற்போதுதான் இந்தியா பாகிஸ்தான் உறவில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அரசு இந்த விவகாரத்தில் என்ன செய்துள்ளது என்பதை விளக்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு லாகூர் சென்று நவாஸ் ஷெரீப்பை சந்தித்தது ஏன் என்றும் பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

காஷ்மீரில் தீவிரவாதிகளை தியாகிகளாக சித்தரிக்க முயலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மத்திய அரசு உரிய முறையில் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>