மோசமான வானிலை காரணமாக நேபாள நிலச்சரிவில் சிக்கிய 10 தமிழர்களை மீட்பதில் தாமதம்

மோசமான வானிலை காரணமாக நேபாள நிலச்சரிவில் சிக்கிய 10 தமிழர்களை மீட்பதில் தாமதம்

மோசமான வானிலை காரணமாக நேபாள நிலச்சரிவில் சிக்கிய 10 தமிழர்களை மீட்பதில் தாமதம்

நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரை சேர்ந்த 10 தமிழர்கள் சிக்கினர். மோசமான வானிலை காரணமாக இவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உடன் சென்ற 7 பேர் நேற்று சென்னை புறப்பட்டனர். காஞ்சிபுரம் திருக்காலிமேட்டு பகுதியை சேர்ந்த கோபி (41), உறவினர்கள் மற்றும் நண்பர்களான சென்னை அமைந்தகரை பத்மநாபன் (41), துளசி (48), காஞ்சிபுரம் ராமலிங்கம் (45), குமாரி (43), ஜெயலட்சுமி (57), சங்கரி (34), செல்லம்மாள் (55) மற்றும் வேலூர் குடியாத்தம் சுகுணா (42), கலவை மகேஸ்வரி (35), காஞ்சிபுரம் திருக்காலிமேடு சீனிவாசன், வெங்கடேசன், வேணி, அமுதன், ஜீவானந்தம், ஆனந்தன், காமகோட்டி ஆகிய 17 பேர் நேபாளத்துக்கு கடந்த 20ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலம் கோரக்பூர் சென்றனர். அங்கிருந்து பேருந்து மூலம் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த 24ம் தேதி முக்திநாத் மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து மற்றும் புத்தமத கோயிலுக்கு செல்ல திட்டமிட்டனர். அப்போது கோபியுடன் சென்ற சீனிவாசன், வெங்கடேசன், வேணி, அமுதன், ஜீவானந்தம், ஆனந்தன், காமகோட்டி ஆகிய 7 பேர் மட்டும் மலைக்கோயிலுக்கு வரவில்லை என கூறியுள்ளனர். எனவே, கோபி, பத்மநாபன், துளசி, ராமலிங்கம், குமாரி, ஜெயலட்சுமி, சங்கரி, செல்லம்மாள், சுகுணா, மகேஸ்வரி ஆகிய 10 பேர் மட்டும் மலை கோயில்களுக்கு சென்றுவிட்டு ஜீப்பில் கீழே திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. பாதை முழுவதும் மண்ணால் மூடியதால் ஜீப்பில் திரும்ப முடியாமல் தவித்தனர்.

இது குறித்து கோபி என்பவர் காஞ்சிபுரம் கலெக்டர் மூலம் மத்திய, மாநில அரசுக்கு நிலைமை தெரியப்படுத்தி உள்ளார். இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சகம் அவர்களை மீட்க முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மோசமான வானிலை காரணமாகவும் மலையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் தமிழர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி சேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முக்திநாத் மலைக்கோயிலுக்கு செல்லாமல் மலையடி வாரத்தில் உள்ள ஓட்டலில் தங்கிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 7 பேர் அங்கிருந்து நேற்று காசிக்கு வந்தனர். பின்னர் நேற்று இரவு காசியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>