மைனர்களுக்கு மது விற்றால் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: tasmac_2418853h

சென்னை: மதுபானங்களை 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பார் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுள்ளது.
டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. வயதுக்கு வராத மைனர்களுக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த மது விற்பனை குறித்தும் அதன் மூலம் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என்று வக்கீல் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மது பயன்பாடு அத்தியாவசியமாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வயதுக்கு வராத இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இது குறித்து ஆய்வு செய்து கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு அமைக்கப்பட்டவுடன் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 2 மாதங்களில் அறிக்கை தருமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஸ் குமார் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் தலைமையில் 7 ேபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு செய்து கடந்த ஜூலை 5ம் தேதி ஒரு சுற்றறிக்கையை டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், 21 வயதுக்கு குறைவான வயதுடையவர்களுக்கு மது வழங்கக் கூடாது. மீறி அவர்களுக்கு மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்மந்தப்பட்ட பாரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்கப்படமாட்டாது என்று அறிவிப்பை வைக்க வேண்டும்.

சந்தேகம் ஏற்பட்டால் படம் ஒட்டிய அடையாள அட்டையை டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டு அதன் அடிப்படையில் மது வழங்கலாம். மாவட்ட மேலாளர்கள் இது குறித்து கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். மாவட்ட தலைமை கல்வி அதிகாரியிடமும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆலோசனை நடத்தி 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பல்வேறு துறை அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>