மேற்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து டாக்டர்கள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம்.

Dr._ravindranath_long_11503

மதுரை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இருந்த இந்த ஒதுக்கீட்டு முறையை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனால் தமிழக சுகாதாரத்துறைக்கு சிறப்பு தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் கிடைக்காமல் அனைத்து மருத்துவமனைகளும் பாதிக்கப்படும்.

இந்த உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏப். 20 (இன்று) காலை 7 மணி முதல் 9 மணி வரை வெளிநோயாளிகள் பிரிவு புறக்கணிக்கப்படும். அதே நேரத்தில் விபத்து உள்ளிட்ட உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>