மேட்டூர் அருகே 8ம் வகுப்பு மாணவியை கடத்திய கும்பலை விரட்டி பிடித்த பொதுமக்கள்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சினிமா பாணியில் 8ம் வகுப்பு மாணவியை கடத்திய கும்பலை போலீசாருடன் பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். ஜலகண்டபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின் மகள் தான் கடத்தப்பட்டவர். பள்ளிக்கு சென்ற போது ஆம்னி வேனில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்று ஜலகண்டபுரம் சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர். சமுதாய கூடத்தில் இருந்து சாமர்த்தியமாக தப்பி மனைவி தப்பி வந்தார்.

புகாரின் பேரில் களமிறங்கிய காவல்துறையினருடன் ஊர்மக்களும் சமுதாய கூடத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்து தப்பியோடிய ஒருவரை போலீசார் சுற்றிவளைத்தனர். மேலும் காரில் ஏறி தப்ப முயன்ற 4 பேரை பொது மக்கள் விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் ஜலகண்டபுரத்தை சேர்ந்த ரமேஷ் கண்ணன், சந்தோஷ் குமார், சோமசுந்தரம் ஆகியோர் எனபது தெரிய வந்தது. எதற்காக மாணவியை கடத்தினார்கள் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>