மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

10506782_832795766739917_7803827480041739454_o

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரியில் திறக்கப்பட்டு வரும் நீர் மற்றும் நீர்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 6 அடி வரை உயர்ந்துள்ளது. 6659 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7,017 கனஅடியாக உயர்ந்துள்ளது.

நேற்று 32 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 33 அடியாக உயர்ந்தது. முன்னதாக அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 32.01 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 33.30 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 8.90 டி.எம்.சி-யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>