மெழுகு விலை டன்னுக்கு ரூ.6000 உயர்வு

மெழுகு விலை டன்னுக்கு 6000 ரூபாய் ஏற்றியிருக்கிறார்கள்… அதைவிட கொடுமை – சிபிசிஎல் மெழுகு உற்பத்தியை ஒரு மாதம் நிறுத்தியிருக்கிறார்கள்…

இந்த 3 மாதங்கள்தான் நமக்கு வியாபாரம்…பண்டிகை காலங்கள்… மழை காலம்… மத்திய மாநில அரசுகளுக்கு சிறு தொழில்கள் பற்றி கவலையே கிடையாது… அறிவும் கிடையாது… அவர்கள் லட்சியம் அம்பானிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்… அவ்வளவுதான்….
chinese-origin-wax-250x250
மெழுகு தயாரிக்கும் மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமாகும்… இதில் இப்போது வியாபாரிகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து லோடு லோடாக மெழுகை ஆந்திரா கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் வியாபாரிகளுக்கும் அனுப்பி விடுகிறார்கள்… மார்வாடிகள் மொத்தமாக வாங்கி விடுகிறார்கள்…

மத்திய அரசின் நிறுவனம் – சிறு தொழில்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதோ – உற்பத்தியாளர்களுக்கு முதலில் மூலப் பொருள் வழங்க வேண்டும் என்பதோ – தொழிற்சாலை இயங்கும் மாநிலத்திற்கு தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும் என்கிற அறிவோ எந்த ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் இல்லாமல் இருப்பாதுதான் மிகப் பெரிய சோகமாகும்…

மணல் கொள்ளையை விட மிகப் பெரிய கொள்ளை மெழுகு கொள்ளையாகும்… இது பற்றி சி பி ஜ விசாரித்தால் பல ஆயிரம் கோடிகள் ஊழல்கள் வெளி வரும்.
- விருதகிரி, முகநூலில்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>