முல்லை பெரியாறில் கேரள அரசு பார்க்கிங் அமைக்க இடைக்கால தடை

Tamil_News_large_1911515

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் பார்க்கிங் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், ‘கேரளா அரசு பார்க்கிங் அமைக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், வன பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி பெற தேவையில்லை. எனவே, கேரளா அரசு பார்க்கிங் அமைக்க தடையில்லை’ என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், இன்று அவசர வழக்காக விசாரித்தது. அப்போது, முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அரச பார்க்கிங் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>