மும்பையில்5 பெண்களை போதை ஊசி போட்டு கொலை செய்த டாக்டர்

மும்பையில்5 பெண்களை போதை ஊசி போட்டு கொலை செய்த டாக்டர்

மும்பையில்5 பெண்களை போதை ஊசி போட்டு கொலை செய்த டாக்டர்

மும்பை
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் 6 பேரை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்து அதிர்ச்சியடையவைத்து உள்ளார்.

மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சந்தோஷ்பால் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆணை விஷ ஊசி போட்டு கொலை செய்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் மத்திய மும்பையில் உள்ள தாதரில் வைத்து டாக்டர் பாலை கைது செய்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மங்கள் ஜீதே
(வயது 49) என்ற பெண்ணை காணவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது டாக்டர் பாலுடன் ஜீதேக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது இதை தொடர்ந்து போலீசார் டாக்டரை கண்காணித்து வந்தனர்.

டாக்டர் பால் மற்றும் அவரது உதவியாளர் நர்ஸ் ஜோதி மந்த்ரா ஆகியோர் சேர்ந்து மங்கள் ஜீதேவை கடத்தி உள்ளனர். அதே நாள் டாக்டர் பாலும் நர்ஸ் மந்த்ராவும் சேர்ந்து அதிக அளவு போதை மருந்தை அவருக்கு கொடுத்து அவரை கொலை செய்து உள்ளனர். மேலும் அவரது உடலை பண்ணை வீட்டில் புதைத்து உள்ளனர்.

டாக்டர் பால் நர்ஸ் மந்த்ராவுடனும், மங்கள் ஜீதேவுடனு ரகசிய உறவு வைத்து இருந்து உள்ளார். ஜீதேவுக்கு நர்ஸ் மந்த்ராவுடனான உறவு பிடிக்கவில்லை இதனால் டாக்டரை மிரட்டி உள்ளார். இதை தொடர்ந்தே டாக்டர் பாலும், நர்ஸ் மந்த்ராவும் ஜீதேவை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர்.

இந்த விசாரணையின் போதுதான் டாக்டர் இதுபோல் கடந்த சில ஆண்டுகளாக 5 பெண்களையும் ஒரு ஆணையும் கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த 5 பெண்கள் உடல்களையும் அவரது கிராம வீட்டில் புதைத்து உள்ளார். ஆண் உடலை உள்ளூர் அணையில் வீசி உள்ளதாக தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் 4 பெண்களின் உடலை தோண்டி எடுத்து உள்ளனர். டாக்டர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவுசெய்து உள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>