முதுநிலை மருத்துவ மாணவர்கள் 95 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்: இந்திய மருத்துவ கவுன்சில்

MEDICAL-COUNCIL-India

புதுடெல்லி: சென்டாக் பொதுக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யாமல் நிகர்நிலை மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 95 முதுநிலை மருத்துவ மாணவ, மாணவியரை நீக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது. சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீட்டு ஆணை பெற்றும் சேர்க்கை அனுமதி கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் மனு அளித்தனர்.

ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று கூறி சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகார்கள் அடங்கிய கடிதத்தை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கிரண்பேடி அனுப்பி வைத்தார். 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் பட்டியலையும், சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்பட்ட பட்டியலையும் மருத்துவ கவுன்சில் தீவிரமாக ஆய்வு செய்தது. பொதுக் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படாத முதுநிலை மருத்துவ மாணவர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>