முதல் முறையாக ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார் பி.வி.சிந்து.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும்.

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரினுக்கு எதிராக 3 செட்களில் இறுதி வரை போராடிய பி.வி.சிந்து வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்தார்.

ரியோ ஓலிம்பிக் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மாரின் 3 செட்கள் ஆட்டத்தில் 2-1 என்று வென்று தங்கம் வெல்ல, இயன்ற வரை போராடிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.

முதல் முறையாக ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார் பி.வி.சிந்து.

பரபரப்பான இறுதிப் போட்டியில் முதல் செட்டை அபாரமாக ஆடி 21-19 என்று வெற்றி பெற்ற சிந்து, இரண்டாவது செட்டில் 12-21 என்று தோல்வி அடைந்தார், 3-வது செட்டில் சற்றும் மனம் தளராது ஆடிய பி.வி. சிந்து கடைசியில் போராடி 15-21 என்று தோல்வி தழுவினார்..

உலகத் தரவரிசை நம்பர் 1 ஸ்பெயின் வீராங்கனை கடைசியில் 19-21, 21-12, 21-15 என்ற செட்களில் வெற்றி பெற்று தங்கம் வென்றார், பி.வி.சிந்து தனது அறிமுகப் ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவுக்காக பாட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் முதல்முறையாக வென்று சரித்திரம் படைத்தார்.

அறிமுக ஒலிம்பிக் தொடரில் சிந்து வெளிப்படுத்திய ஆட்டத்திறன், மனோவலிமை அசாதாரணமானது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

முதல் செட்டில் 5 புள்ளிகளைத் தொடர்ந்து பெற்று வென்ற சிந்து:

முதல் செட்டில் தொடக்கத்தில் சிந்து அடித்த ஷாட்களை அபாரமாகக் கணித்து ஆடாமல் விட்டே அவுட் செய்த கரோலினா மரின் 5-2 என்று முன்னிலை பெற்றார். முதலில் வலைக்கருகில் சிந்துவை சில மென்மையான டேப்கள் மூலம் முன்னுக்கு இழுத்த மரின் பிறகு சக்தி வாய்ந்த ஷாட்களை சிந்து தொட முடியாது அடித்து புள்ளிகளை அள்ளினார். இதனால் 10-6 என்று மாரின் முன்னிலை பெற்றார்.

பிறகு சிந்து ஒரு ஸ்மாஷ் ஒரு லாப் மூலம் இரண்டு புள்ளிகளை பெற மாரின் ஒரு தவறிழைக்க 9-13 என்று நெருங்கினார் சிந்து. கடைசியில் சிந்து மாரினை சில தவறுகளை இழைக்கச் செய்து அவரை முன்னுக்குப் பின்னும் அலைக்கழித்து 14-16 என்று நெருங்கினார். கடைசியில் ஒரு 49 ஷாட் ராலியில் மரின் கடைசியில் லாங்கில் அடித்து தவறிழைத்தார் 17-16 என்று நெருங்கியது.

கடைசியில் இரண்டு அபாரமான ஷாட்கள் மூலம் 19-16 என்று மாரின் முன்னிலை பெற்றார். சரி வெற்றி பெற தேவை 2 புள்ளிகள் என்ற நிலையில் பி.வி.சிந்து தற்போது மாரினை சில சிக்கல்களுக்குள்ளாக்கினார், தனது கடினமான கோணங்களினால் மாரின் தொடர்ச்சியாக 3 ஷாட்களை வெளியே அடித்தார், ஒரு நெஞ்சுயர பந்தை நெட்டில் தட்ட சிந்து 20-19 என்று முன்னேறினார், கடைசியில் சிந்து ஒரு ஷாட்டை மாரினின் உடலுக்கு அடிக்க எடுக்கத் திணறி முதல் செட்டை இழந்தார் மாரின் சிந்து 21-19 என்று வென்றார்.

2-வது செட்டில் மாரின் ஆதிக்கம்:

2-வது செட்டில் தனது சப்தத்தையும் ஆக்ரோஷத்தையும் கூட்டிய மாரின் சில ஷாட்கள் மூலம் தொடக்கத்திலேயே 3-0 என்று முன்னிலை பெற்றார். பிறகு மாரின் விடாமல் சில அபாரமான முன் கை வாகான ஸ்லைஸ், பந்தை கீழே அடிப்பது, சிந்துவின் ராக்கெட் தொட முடியாது தள்ளி அடிப்பது என்று ஆதிக்கம் செலுத்தி 6-2 என்று முன்னிலை பெற்றார். இதன் பிறகு தொடர்ச்சியான ஆதிக்கத்தில் மாரின் சிந்துவின் மனோபலத்தை குலைக்குமாறு ஆடினார், இடது கை வீரர் என்பதால் ஷாட்கள் எந்தப்புறம் அடிப்பார் என்பதை கணிக்க முடியவில்லை, அவர் ரிடர்னிலும் பெடரர் போல் முதுகைக் காட்டிக் கொண்டெல்லாம் எடுத்து 11-2 என்று முன்னிலை பெற்றார். கடைசியில் 8 புள்ளிகள் இடைவெளி இருவருக்கும் வர 21-12 என்றி மாரின் வென்றார்.

உயிரைக்கொடுத்து போராடிய இறுதி செட்:

3-வது இறுதி செட் பரபரப்பான எதிர்பார்ப்புடன் தொடங்கியது. மாரின் சர்வில் வென்றார், பிறகு சிந்து ஒரு புள்ளி வென்றார், அடுத்ததாக தலைக்கு மேல் வந்த பந்தை தனது வலுவான ஸ்மாஷ் ஷாட்டை ஆடினார் சிந்து ஆனால் பந்து வலையைத் தாக்க மாரின் 3-1 என்று முன்னிலை பெற்றார்.

அதன் பிறகு மாரின் தனது ஆட்டப்பாணியையே மாற்றி ரிஸ்டி ஷாட்களை ஆடி 5-1 என்று முன்னிலை பெற்றார். அடுத்ததாக மாரின் ஒரு கிராஸ் கோர்ட் ஷாட்டை வெளியில் அடிக்கவும் சிந்து ஒரு ஸ்மாஷை தாக்கவும் 3-6 என்று நெருங்கினார் சிந்து. இந்நிலையில் சிந்துவின் பேக்ஹேண்டுக்கு பந்தை அடித்து 9 புள்ளிகளுக்குச் சென்றார் மாரின், ஆனால் சிந்துவும் விடவில்லை ஒரு ஸ்மாஷ் மூலம் 5-9 என்று நெருங்கினார். இத்துடன் 4 தொடர் புள்ளிகளை வென்ற சிந்து 8-9 என்று நெருக்கினார். இந்நிலையில் சிந்து அடித்த ஷாட் ஒன்றை அருமையாகக் கணித்த மாரின் விட்டார் அவுட் ஆனது 10-8 என்று மாரின் முன்னிலை பெற்றார்

இப்போது மாரினின் உடலுக்கு நேராக ஒரு ஷாட்டை அற்புதமாக சிந்து அடித்து பிறகு ஒரு நீண்ட ராலியில் சிந்து வென்று 10-10 என்று ஆட்டம் சூடுபிடித்தது. அதாவது முனைகள் மாறும்போது மாரின் 11-10 என்று முன்னிலை வகித்திருந்தார். இந்நிலையில் சிந்து அறியாமல் சில பிழைகளைச் செய்தார், சில ஷாட்களை சோதனையாக முயற்சி செய்தார் இதனால் மாரின் 13-10 என்று முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து ஸ்மாஷ்கள் மூலம் மாரின் 15-11. கடைசியில் சிந்து 2 புள்ளிக்ளை பெற மாரின் ஒரு புள்ளியை பெற 16-13 என்று திரில்லிங் முடிவுக்குச் சென்றது. ஆனால் சிந்து மேலும் சில தவறுகளைச் செய்தார், மாரினின் ஸ்மாஷ்கள், இடது கை லாப்கள், ஸ்லைஸ்கள் சிந்துவுக்கு குழப்பம் விளைவிக்க உடல் மொழி தளர்ந்தது கடைசியில் 21-15 என்று மாரின் தங்கம் வென்றார்.

இதனால் சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சிந்து.

துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் (2004, ஏதென்ஸ்), விஜய் குமார் (2012, லண்டன்), மல்யுத்த வீரர் சுஷீல் குமார் (2012 லண்டன்) ஆகியோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மற்ற

இந்தியர்கள் ஆவர்.

இதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5-ஆவது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமாகியுள்ளது. இதுதவிர இளம் வயதில் (21)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2-ஆவது பதக்கத்தை பெற்றுள்ளது.

குடியரசுத் தலைவர் பாராட்டு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்களும் சாதிக்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பாராட்டு

சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், “சில்வர் சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் செய்த சாதனை, வரலாற்று

முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு நினைவு கூரப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சோனியா பாராட்டு

ஒவ்வொரு இளம் இந்தியர்கள் மனதிலும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளார் சிந்து. அவரது இந்த வெள்ளிப் பதக்கம், இந்தியத் தாயின் மகுடத்தில் பதிக்கப்பட்டுள்ள விலைமதிக்க முடியாத ஒரு

ஆபரணமாகும். ஒரு நட்சத்திரத்தைப் போல விளையாடிய அவர், அனைத்து இந்தியர்களையும் பெருமையடையச் செய்துள்ளார்.

ஆந்திர முதல்வர் பாராட்டு

தங்கப் பதக்கத்துக்காக மனம்தளராமல் போராடிய சிந்து, இந்திய இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளார். அவர் தெலுங்கு பெண் என்பதில் பெருமை கொள்கிறோம். சிந்துவின் வெற்றிக்காக

பாடுபட்ட பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ரூ.2 கோடி, 2 கார்… கொட்டும் பரிசு மழை!

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துக்கு பரிசு மழை கொட்டி வருகிறது. அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என

அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மனையும் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாட்மிண்டன் சங்கம் (பாய்), சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.10 லட்சமும் வழங்குகிறது.

மத்தியப் பிரதேசத்தின் சார்பில் சிந்துவுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் ரூ.5 லட்சம்

வழங்கப்படுகிறது. ஹைதராபாத் மாவட்ட பாட்மிண்டன் சங்க தலைவர் சாமுண்டீஸ்வரநாத், பி.எம்.டபிள்யூ காரை சிந்துவுக்கு பரிசளிக்கிறார். இவர், லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம்

வென்றபோது அவருக்கும் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் எஸ்யூவி கார் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடாவைச் சேர்ந்த பிரபல தங்க நகைக் கடை, சிந்துவை விளம்பரத் தூதராக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஏராளமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சிந்துவுக்கு வீடு பரிசளிக்கவுள்ளதாக

தகவல் வெளியாகியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>