முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னையில் இன்று சந்தித்து பேசுகிறார்

 

மத்திய மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மந்திரி பியூஷ் கோயல் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் இன்று (15-ந் தேதி) பிற்பகல் பங்கேற்கிறார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.

மத்திய மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மந்திரி பியூஷ் கோயல் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் இன்று (15-ந் தேதி) பிற்பகல் பங்கேற்கிறார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.

 

 

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னையில் இன்று சந்தித்து பேசுகிறார்.

 

இன்று மாலையில்… மத்திய மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மந்திரி பியூஷ் கோயல் சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் இன்று (15-ந் தேதி) பிற்பகல் பங்கேற்கிறார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சந்திக்கிறார்.

மின் திட்டங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தை தமிழக அரசு அப்படியே ஏற்க முன்வரவில்லை. அதில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இந்த சந்திப்பின் போது உதய் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்வது தொடர்பாக பசுமை வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். எனவே, இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>