முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தனித்தனியே ஆலோசனை.

625.500.560.350.160.300.053.800.900.160.90

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபால் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சபாநாயகர் அறையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எம்.பி.வைத்தியலிங்கம், அரசு கொறடா ராஜேந்திரன், தங்கமணி, கடடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் முதலமைச்சர் சபாநாயகருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லையென 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தனர். மேலும் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், கே.சின்னையா, பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினகரன் தரப்பினர் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் எனக்கூறியது தொடர்பாகவும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>