சென்னை:
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசாகும்.