அரசு பொறியியல் மாணவர்கள் 100 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சி :முதலமைச்சர் ஜெயலலிதா

ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் ரூ.50 கோடியில் மோட்டார் வாகன தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை கழகத்தில் ரூ.50 கோடியில் 5000 பேர் அமரும் வகையில் கூட்டரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை அருகே அரசு கலைக் கல்லூரி

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் அரசினர் கலைக் கல்லூரி ரூ.8.48 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை

மதுரையில் ரூ.4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த மருத்துவமனை காமராஜர் பல்கலை கழக வளாகத்திற்குள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை பரிசோதிக்க தர சோதனை மையம் மதுரையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேட்டுபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி

மேட்டுபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி ரூ.8.29 கோடியில் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். விழுப்புரம், நீலகிரியில் ரூ.12 கோடியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் மண்டல மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

புதிதாக 5 தொடக்கப்பள்ளி

தமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும், 19 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ரெயின் கோட்

மலைபிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக் ரெயின் கோட், பூட்ஸ், சாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மழைக்காலங்களில் எவ்வித சிரமும் இன்றி பள்ளிக்கு சென்று வர தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>