முட்டையை தொடர்ந்து அரிசி, சர்க்கரையிலும் கலப்படம் செய்யப்படும் பிளாஸ்டிக் : பீதியில் மக்கள்…

jakkamma

பெங்களூரு: நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சர்க்கரையில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள ஹசன மாவட்டத்தில் விற்கப்பட்ட சர்க்கரையை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக அமைச்சர் மஞ்சு, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். இதே போல ஐதராபாத்தில் உள்ள சில இடங்களில் பிளாஸ்டிக் கலந்த அரிசி விற்கப்பட்டதை தெலுங்கானா மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்த அரிசியை சேகரித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்த அதிகாரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரியில் பிளாஸ்டிக் அரிசி இருக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்றார். இது குறித்து தொடர் விசாரணை நடந்து வருவதாக கூறினார். அண்மையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை விவகாரம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இது போன்ற கலப்பட்டங்களை தடுக்க மக்கள் கோரியுள்ளனர்.

தமிழகத்தில் அரிசியில் கலப்படம் இல்லை:

தமிழகத்தில் அரிசியில் கலப்பட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதிபட கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி தருவதால், பிளாஸ்டிக் அரிசிக்கு வாய்ப்பில்லை என்றார். மேலும் பிளாஸ்டிக் அரிசி பற்றி புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>