மாயாவதியை இழிவுபடுத்திய பாஜகவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்

மாயாவதியை இழிவுபடுத்திய பாஜகவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்

குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து தனது தலைமையில் எதிர்வரும் திங்கள் காலை சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
குஜராத் மாநிலத்தில் செத்த மாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்வோர் நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் படுபயங்கரமாகத் தாக்கியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து தனது தலைமையில் எதிர்வரும் திங்கள் காலை சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

குஜராத் மாநிலத்தில் செத்த மாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்வோர் நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் படுபயங்கரமாகத் தாக்கியுள்ளனர். அதையட்டி குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குஜராத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தப் போராட்டங்களின் விளைவாக குஜராத் மாநிலத்தில் தலித்துகளைத் தாக்கியவர்கள் எனச் சிலரைக் கைது செய்தும் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. தலித்துகளைத் தாக்கியவர்கள் அனைவரையும் அதேபோன்று பொதுஇடத்தில் நிறுத்தி தண்டிக்கும்வரை ஓயமாட்டோம் என குஜராத் தலித் மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குஜராத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார். அவரை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் செல்வி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் எனது தலைமையில் எதிர்வரும் 25.7.2016 திங்கள் காலை சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் அனைத்து சனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்று நீதிக்கான இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>