மாநில அரசுகள் மத்தியஅரசுடன்இணைந்தது பணியாற்றினால் தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர்

மாநில அரசுகள் மத்தியஅரசுடன்இணைந்தது பணியாற்றினால் தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர்

மாநில அரசுகள் மத்தியஅரசுடன்இணைந்தது பணியாற்றினால் தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் பிரதமர்

 

பிரதமர் தலைமையில் மாநில முதல்–மந்திரிகள் மற்றும் மத்திய மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கடந்த 1990–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. மத்திய அரசால் நடத்தப்படும் இந்த கவுன்சில் கூட்டம் இதுவரை 10 முறை கூட்டப்பட்டு உள்ளது.

 

கடைசியாக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2006–ம் ஆண்டு இந்த கூட்டம் நடந்தது. கடந்த 2014–ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசு, இந்த கவுன்சிலை புதுப்பித்தது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் 11–வது கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது.

 

பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய அரசுடன் மாநில அரசுகள் தோளோடு தோள் சேர்த்து பணியாற்றினால் தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். கடந்த ஆண்டை இந்த ஆண்டு 21 சதவீதம் கூடுதலாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் மாநில முதல்–அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் சந்திக்கும் வாய்ப்புக்கள் மிக குறைவு.இவ்வாறு அவர் பேசினார்.

 

இதில் தமிழக முதல்-மந்திரி ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு தாமதமாகவே வந்து கலந்து கொண்டார். உத்தர பிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 

மாநில முதல்–மந்திரிகளும், மத்திய மந்திரிகளும் பங்கேற்கும் இன்றைய கூட்டத்தில் மத்திய–மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பாக பஞ்சி குழு வழங்கிய பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அத்துடன் ஆதார் அட்டை பயன்பாடு, நேரடி மானிய திட்ட பயன்பாடு, பள்ளிக்கல்வி மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

 

மேலும் உள்நாட்டு பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள், உறவுகள், விவகாரங்கள் மற்றும் பொருளாதாரம், சமூக திட்டங்கள் குறித்தும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>