மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவச ரொக்கப் பரிவர்த்தனை : தனியார் வங்கிகள் அறிவிப்பு

download

டெல்லி: இனி மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ரொக்கப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. HDFC, ICICI, AXIS வங்கிகள் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டன. ஐந்தாவது முறையிலிருந்து ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கியில் 4 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.150 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரம் வரை மட்டுமே வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICICI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5-வது பரிவர்த்தனையிலிருந்து ஒவ்வொரு ரொக்க பரிவர்த்தனைக்கும் ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும். நாளொன்றுக்கு வங்கி கணக்கில் ரூ.50,000 வரை நேரடியாக டெபாசிட் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதே போல AXIS வங்கியும் ரொக்க பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் ATM-ல் பணம் எடுப்பதற்கோ, இணையதளம் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுவதற்கோ பொருந்தாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>