மாணவர்களிடையே மோதல் : திருவாரூர் கலைக்கல்லூரிக்கு 8-ம் தேதி வரை விடுமுறை

3411_1_thumb_murder_clipart

திருவாரூர்: திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லூரிக்கு வரும் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தின் முன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சில மாணவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையொட்டி கல்லூரியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவி உட்பட சில மாணவர்கள் காயமுற்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லூரியில் பதற்றமான சூழல் நிலவுவதால் வரும் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>