மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக ஒருவர் அடித்துக் கொலை பா.ஜனதா தலைவர் கைது

201707020916471333_BJP-leader-among-2-held-for-Jharkhand-lynching_SECVPF

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி அலிமுதீன் என்ற அஸ்கார் அன்சாரி என்பவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான வீடியோவும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.

அதே நாளில் அன்சாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அன்சாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜனதா உள்ளூர் தலைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராம்கார்க் மாவட்ட பா.ஜனதா மீடியா பிரிவு தலைவர் நித்யானந்த் மஹாடோ மற்றும் அன்சாரியை கொடூரமாக தாக்கிய சோது ராணாவை போலீஸ் கைது செய்து உள்ளது.

இதற்கிடையே நித்யானந்த் மஹாடோ, சம்பவ இடத்திற்கு என்ன நடக்கிறது என பார்க்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் சென்ற பின்னரே சென்றேன் என கூறிஉள்ளார்.

இச்சம்பவம் பா.ஜனதாவின் மற்றொரு மீடியா பிரிவு தலைவர் வருண் சிங் பேசுகையில், நித்யானந்த் மஹாடோ என்னுடன் பணியாற்றுபவர். அவருடைய வீடும் இப்பகுதியில் தான் உள்ளது. கொலை செய்யப்பட்டது தொடர்பாக பரவி வரும் வீடியோவில் அவர் டிஎஸ்பிக்கு அருகே நிற்கிறார். சம்பவம் நடந்து முடிந்த பின்னரே அவர் அப்பகுதிக்கு சென்றார். ஆனால் அவரை போலீஸ் அவசரகதியில் கைது செய்து உள்ளது, என்றார். கைது நடவடிக்கையை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜனதா மாவட்ட தலைவர் பானெர்ஜி, அன்சாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டன்ம் தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் அப்பாவி மக்களை தொல்லை படுத்த கூடாது என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>