மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது ‘மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை இல்லை’ சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 

புதுடெல்லி, இந்த ஆண்டில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

அவசர சட்டம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்ற பொது நுழைவுத்தேர்வை (‘நீட்’) இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 24–ந் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்த அவசர சட்டத்தின்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு கிடையாது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்து மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் சங்கல்ப் அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி, தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

மனுதாரர் ஆனந்த் ராய் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அம்ரீந்தர் சரண் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:– தீர்ப்புக்கு எதிரானது சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ என்ற பொது நுழைவுத்தேர்வின் மூலமாகத்தான் நடத்த வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ள அவசர சட்டம் முற்றிலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. மேலும் இந்த அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக அமைந்து உள்ளது. எனவே மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>