அறிவியல் என்பது சுயசிந்தனை அடிப்படையிலானது. பள்ளியில் தாய்மொழி கல்வி என்பது அவசியம்-மயில்சாமி அண்ணாத்துரை

அறிவியல் என்பது சுயசிந்தனை அடிப்படையிலானது. பள்ளியில் தாய்மொழி கல்வி என்பது அவசியம்-மயில்சாமி அண்ணாத்துரை

அறிவியல் என்பது சுயசிந்தனை அடிப்படையிலானது. பள்ளியில் தாய்மொழி கல்வி என்பது அவசியம்-மயில்சாமி அண்ணாத்துரை

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த 32 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதைதொடர்ந்து பேசிய அவர், அறிவியல் என்பது சுயசிந்தனை அடிப்படையிலானது. பள்ளியில் தாய்மொழி கல்வி என்பது அவசியம்- என்றார்.
தேசிய அளவில் எல்லா துறைகளின் பயன்பாட்டுக்காக அடுத்து 3 அல்லது 4 ஆண்டுகளில் 60 அல்லது 70 செயற்கைகொள்களை அனுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பினால்தான் இந்த இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார்.

சந்திராயன் 2 வரும் 2017-18 ஆம் ஆண்டில் நிலவில் இறங்கி அங்கு ரோபோ மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்- சந்திரனில் ரோபோ மூலம் எடுக்கப்படும் மண் மாதிரிகள் சந்திரனில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் .
சூரியனில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் ஆதித்யா செயற்கைகோள் 2019-20 ஆண்டில் அனுப்பப்படும்- அதற்கான முதற்கட்டப்பணிகள் துவங்கியுள்ளது என்று தெரிவித்தார்மயில்சாமி அண்ணாத்துரை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>