‘மன அழுத்தம் தராத பாடத்திட்டம்’ மழலையர் பள்ளி : மு.திலிப்

குழந்தைகள் கவர `பெட் கார்னரும்’’ அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முயல்கள் மற்றும் பறவைகளுக்கு செல்ல பெயர் வைத்து அழைப்பது, ரைம்ஸ் சொல்வது, சேட்டைகள் செய்வது என குட்டீஸ்கள் அசத்துகின்றனர்

குழந்தைகள் கவர `பெட் கார்னரும்’’ அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முயல்கள் மற்றும் பறவைகளுக்கு செல்ல பெயர் வைத்து அழைப்பது, ரைம்ஸ் சொல்வது, சேட்டைகள் செய்வது என குட்டீஸ்கள் அசத்துகின்றனர்

புதுச்சேரி: குழந்தையை எல்கேஜி சேர்த்ததுமே இதை படி… அதை படி… என பெற்றோரும், ஆசிரியர்களும், அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சுதந்திரத்துடன் செயல்பட முடியாமல் குழந்தைகள் மன அழுத்தத்தோடு வளருகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக, புதுச்சேரியில் உள்ள ஒரு மழலையர் பள்ளி, குழந்தைகள் சுதந்திரமாக செயல்படும் வகையில் பாடத்திட்ட முறையை வகுத்து நடத்தி வருகிறது. மனஅழுத்தமில்லை… மகிழ்ச்சியான கல்வி என்பதை இலக்காக கொண்டு இந்த பள்ளி முன்னேற்றப்பாதையில் பீடு நடை போடுகிறது. இதன் சிறப்பை அறிந்து குழந்தைகளை சேர்க்க ஆண்டுதோறும் வரிசையில் நிற்கும் ெபற்றோர்கள் ஏராளம். இதை பார்க்கும் போது மிகப்பெரிய தனியார் பள்ளியாக இருக்குமோ? என்று நம்மில் பலருக்கும் எண்ணத் தோன்றும். ஆனால், அது ஒரு அரசு பள்ளி என்றால் நம்ப முடிகிறதா? புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி மனையியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிதான்.

மனையியல் துறையில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு குழந்தை மேம்பாடு’’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. இப்பாடத்தில் குழந்தைகளின் வளர்ச்சி, மனநிலை உள்ளிட்ட அனைத்தையும் மாணவிகள் கற்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இத்துறை மாணவிகள் குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த 1972-73ம் ஆண்டு பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் இந்த மழலையர் பள்ளி துவங்கப்பட்டது. அப்போது 24 மாணவிகளுக்கு 24 குழந்தைகளை பள்ளியில் சேர்த்தோம். தற்போது 40 மாணவிகள் படிப்பதால் 40 குழந்தைகளை சேர்க்கிறோம் என மனையியல் துறைத்தலைவர் ஜோஸ்பின் நிர்மலா மணி கூறுகிறார்.
இந்த மழலையர் பள்ளி காலை 9.15 மணிக்கு துவங்கி மாலை 3.15 மணி வரை இயங்குகிறது.

இங்கு படித்தல், எழுதுதல், எண் கணிதம், கதை பகுதி, விளையாட்டு என்ற நிலைகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கவர `பெட் கார்னரும்’’ அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முயல்கள் மற்றும் பறவைகளுக்கு செல்ல பெயர் வைத்து அழைப்பது, ரைம்ஸ் சொல்வது, சேட்டைகள் செய்வது என குட்டீஸ்கள் அசத்துகின்றனர். மேலும் நடனம், யோகா போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்காக ஒரு நூலகமும் உள்ளது. வார விடுமுறை தினங்களில் நூலகத்தில் உள்ள கதை மற்றும் கார்ட்டூன் சித்திரங்கள் இடம் பெற்ற நூல்கள் குழந்தைகள் வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் கொடுக்கப்படுகிறது. நிறைவாக யுகேஜி முடித்து விட்டு வெளியே செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவை ஆசிரியர்களே நடத்தி வாழ்த்துகின்றனர்.

பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு ஊட்டுவதற்கு பெற்றோர்களுக்கு அனுமதி கிடையாது. அனைத்து குழந்தைகளும் கொண்டு வரும் உணவை அவர்களாகவே சாப்பிட பயிற்சி அளிக்கப்படுகிறது. மதிய உணவு முடிந்தும் பள்ளியிலேயே சிறிதுநேரம் குட்டி தூக்கம் போடுகின்றனர். தினமும் காலை 10 மணிக்கு குழந்தைகளுக்கு பாலுடன் பிஸ்கட் அல்லது ஏதேனும் பழங்கள் வழங்கப்படுகிறது. இதேபோல் 3 மணிக்கு பச்சை பட்டானி சுண்டல், முருங்கை கீரை அடை, மரவள்ளி கிழங்கு, கோதுமை புட்டு என ஏதேனும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த திண்பண்டமும் செய்து கொடுக்கின்றனர்.

பாரதிதாசன் கல்லூரி முதல்வர் பூங்காவனம் கூறுகையில், எங்களது மழலையர் பள்ளி ஒரு முன்மாதிரியான பள்ளியாக விளங்குகிறது. இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் போட்டி போட்டு வருகின்றனர். குறைந்த இடங்களே இருப்பதால் அனைத்து இடங்களையும் சேர்த்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கூடுதலாக 5 வகுப்பறையை திறந்தாலும் இதே நிலைதான் ஏற்படும். அந்த அளவிற்கு பெற்றோர் மத்தியில் மழலையர் பள்ளி நற்பெயர் பெற்றுள்ளது,என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>