மன்மோகன் சிங் முடிவால் பலிகடா ஆக்கப்பட்டேன்.ஆ. ராசா

ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்'

ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்’.ஆ. ராசா

ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த முடிவால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்’ என்று விரைவில் வெளியாகவுள்ள தனது புத்தகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார்.

அப்புத்தகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள், மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவின் சில தலைவர்கள் உள்ளிட்டோரை விமர்சிக்கும் வகையில் கருத்துகளையும் ராசா பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

“இன் மை டிஃபென்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தலா சுமார் 400 பக்கங்கள் கொண்ட அப்புத்தகத்தை பிரபல பென்குயின் பதிப்பகம் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அந்த சமயத்தில் 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ராசாவின் புத்தகம் தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தில்லி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

வெளியீட்டில் தாமதமா?: இந்நிலையில், 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய திமுக, கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது. இதனால், தனது புத்தகத்தில் காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்து எழுதிய பக்கங்களை ராசா நீக்கி விடக் கூடும் என்றும் அப்புத்தகம் வெளியாவதை அவர் சார்ந்த திமுக தலைமை விரும்பாததால் புத்தக வெளியீடு திட்டம் ரத்தாகும் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், திட்டமிட்டபடி தனது புத்தகம் வெளிவரும் என்று ராசா கூறியுள்ளார். இது குறித்து தில்லியில் “தினமணி’ நிருபரிடம் ராசா வியாழக்கிழமை கூறியது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தை ஒழிக்கவும் தொலைத்தொடர்பு சேவையில் புதிய நிறுவனங்கள் பங்கேற்று போட்டியை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடனும்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

புத்தகத்தில் என்ன?: ஆனால், சில தொழில் நிறுவனங்களின் சதியால், 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். இந்த வழக்கில் என் மீது சிபிஐ சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறானது என்பதை, இறுதி வாதங்களின் போது முன்வைத்து வருகிறேன்.

எனது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் இந்த வழக்கு ஏற்படுத்திய தாக்கம், அரசு நிர்வாகத்தில் சில தனியார் அமைப்புகளும் அதிகார வர்க்கங்களும் எவ்வாறு செல்வாக்கைப் பயன்படுத்தி நாட்டின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தன என்பதை விளக்கி புத்தகத்தை எழுதியுள்ளேன். அதில் இடம் பெற்றுள்ள சட்டம், தொழில்நுட்ப விவரங்களை பொதுமக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி வருகிறேன். திட்டமிட்டபடி எனது புத்தகம் வெளிவரும். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எனது நடவடிக்கையால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய் குற்றம்சாட்டினார். ஆனால், அவரது அனுமானம் வெறும் மாயத்தோற்றம். வினோத் ராய் எதற்காக இவ்வாறு செயல்பட்டார் என்பதற்கு விடை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மத்தியில் தற்போது ஆளும் அரசு பத்ம பூஷண் விருது வழங்கியதைப் பார்க்கும் போது காரணம் புரிகிறது.

மன்மோகனுக்கு தெரியும்:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடவடிக்கையில் எனது ஒவ்வொரு செயல்பாட்டையும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தேன். அதன் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் ஆகியோர்தான் செம்மைப்படுத்தினர்.

புதிய வட்டங்களில் தொலைத் தொடர்பு உரிமத்தை குறைந்த விலையில் பெற ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் விரும்பின. அவற்றின் சுய விருப்பத்தை என் மீது திணிக்க முற்பட்டன.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன சேவைகளை முடக்கத் திட்டமிட்டன. தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான தொழில் போட்டி சண்டைகளாலும், மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), பிரதமர் அலுவலகம், சிஏஜி அலுவலகம் உள்ளிட்ட அதிகார மையங்களின் செயல்பாட்டுச் சிதைவுகளாலும் நான் பலிகடா ஆக்கப்பட்டேன். இந்த விவரங்களை எனது புத்தகத்தில் விரிவாக விவரித்துள்ளேன் என்றார் ஆ. ராசா.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>