மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் வளர்ச்சியை காண முடியும்;பிரதமர்

பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ‘தற்போதைய ஜனநாயக கூட்டாட்சியில் ஆளுநர் பதவியை  முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசியல் சாசன அமைப்பில் அதற்கான சாத்தியம்  இல்லாத பட்சத்தில், ஆளுநர் பதவி நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.  ஆளுநர் நியமனம், பதவி நீக்கத்தில் மாநில முதல்வர்களும் அங்கம் வகிக்க  வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘தற்போதைய ஜனநாயக கூட்டாட்சியில் ஆளுநர் பதவியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசியல் சாசன அமைப்பில் அதற்கான சாத்தியம் இல்லாத பட்சத்தில், ஆளுநர் பதவி நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆளுநர் நியமனம், பதவி நீக்கத்தில் மாநில முதல்வர்களும் அங்கம் வகிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதுடெல்லி :

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் வளர்ச்சியை காண முடியும்.       அதேநேரத்தில், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை தகவல்களை இருதரப்பும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்று முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

 

மாநில முதல்வர்களை கொண்ட மாநிலங்கள் கவுன்சில் அமைப்பு கடந்த 1990ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.   பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கடைசியாக 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இதன் கூட்டம் நடந்தது. 2014ல் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மாநில கவுன்சில் கூட்டத்தை கூட்டும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் இந்தியா முழுவதும் சென்று மண்டல வாரியாக மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

 

அதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மாநில கவுன்சில் கூட்டம்  டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்கள், 17 மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

 

இந்த கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ்யாதவ், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, காஷ்மீர் கலவரம் காரணமாக அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பதில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார். மற்ற மாநிலங்கள் சார்பில் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகித்து பேசினார். அதன் விவரம் வருமாறு: மத்திய, மாநில உளவுத்துறை எச்சரிக்கைகளை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் உள்நாட்டு பாதுகாப்பை நாம் பலப்படுத்த முடியாது. நமது நாட்டுக்கு எதிரான பாதுகாப்பு சவாலை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். நாம் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனும், மேம்படுத்தப்பட்ட தகவல்களுடனும் இருக்க வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும். இது மத்திய, மாநில உறவுகளை மட்டுமல்ல நமது மக்களின் வாழ்க்கையையும் தரமானதாக மாற்ற உதவியாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள் தோளோடு தோள் சேர்ந்து நடந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.

ஒரு திட்டத்தை எந்தவித ஒத்துழைப்பும் இல்லாமல் ஒரு அரசு அமல்படுத்துவது என்பது மிகவும் சிக்கலானது. அதற்கு தேவையான, போதுமான நிதி ஆதாரங்கள் கிடைத்தால்தான் அந்த திட்டத்தை எளிதாக அமல்படுத்த முடியும். கடந்த காலங்களில் இந்த கூட்டம் ஒரு சில முறை மட்டுமே நடந்துள்ளது. இந்த கூட்டம் கூட்டாட்சி முறையின் தத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.   இதில் கலந்து கொண்டு ஒவ்வொரு மாநில மக்களின் எண்ணங்கள், அவர்களது பிரச்னைகளை எடுத்து பேசி ஒட்டுமொத்த அளவில் அதற்கு ஒரு சிறந்த தீர்வுகாண முடியும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர்களின் மிகச்சிறந்த முயற்சி இந்த கூட்டம் ஆகும். இங்கு சில முடிவுகளை எடுத்து அதை திட்டப்படுத்தி சிறந்த முறையில் அமல்படுத்த வேண்டும். இங்கு கிடைக்கும் முடிவுகள் ஒருமித்த அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள். அதை நாம் சிறப்பாக செயல்படுத்தலாம். அப்படி செயல்படுத்தப்படும்போது நாம் கூட்டாட்சி ஜனநாயகத்தை மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளின் உறவினையும் பலப்படுத்த முடியும்.எனவே இந்த கூட்டத்தில் வெளிப்படையாக உங்கள் எண்ணங்கள், கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதற்கு மிகச்சிறந்த மதிப்பு உண்டு. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

‘இனி மாநிலங்களுக்கு 42% மத்திய வரி வருவாய் பங்கீடு’ 14வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி மத்திய வரி வருவாயில் மாநில அரசிற்கு வழங்கப்படும் நிதி அளவு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் மாநிலங்கள் நிதி ஆதாரத்தை பெருக்கிக்கொள்வதுடன், தங்களது தேவைகளை நிறைவேற்றவும் உதவும். 2014-15ல் பெற்றதை விட 2015-16ல் கூடுதலாக 21 சதவீதம் நிதி மாநிலங்கள் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

 

14வது நிதிக்கமிஷன் மூலம் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,87,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இது கடந்த முறையை விட மிக அதிகம் ஆகும். நிலக்கரி சுரங்கம் ஏலம் மூலம் ரூ.3.35 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மற்ற சுரங்கங்கள் ஏலம் மூலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கூடுதலாக கிடைத்துள்ளது என்றும் மோடி அறிவித்தார்.

 

கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘மத்திய, மாநில அரசுகள் இணைந்து முழு ஒத்துழைப்புடன் செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் பல மேம்பாட்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது முக்கிய பங்கு வகிப்பதாகவே இந்த அரசு நம்புகிறது’ என்றார்.

 

மத்தியில் ஆளும் பாஜ அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து நெருக்கடி அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இப்பிரச்னையை குறிப்பிட்டு பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ‘தற்போதைய ஜனநாயக கூட்டாட்சியில் ஆளுநர் பதவியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசியல் சாசன அமைப்பில் அதற்கான சாத்தியம் இல்லாத பட்சத்தில், ஆளுநர் பதவி நியமனம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆளுநர் நியமனம், பதவி நீக்கத்தில் மாநில முதல்வர்களும் அங்கம் வகிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>