மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பு;ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பு;ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பு;ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசு கொண்டு வர இருக்கும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திராவிடர் கழகம் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை பங்கேற்கிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கல்வியில் புகுத்தாதே என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக பொருளாளர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு :
மத்திய அரசு ஆபத்தான புதிய கல்விக் கொள்கையை வகுக்க திட்டமிட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூநீதி, மதச்சார்பின்மை, தமிழ் மொழிக்கு புதிய கல்விக் கொள்கை சவால் விடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர் உருவாக்கியதுதான் புதிய கல்விக்கொள்கை என்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான கல்விக்கொள்கை பொருந்தி வராது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>