மத்திய அரசுக்கு எச்சரிக்கை: லாரிகள் எரிப்புக்கு இழப்பீடு பெற்று தராவிட்டால் வழக்கு

இழப்பீட்டை மத்திய அரசு, கர்நாடக அரசிடம் பெற்றுத்தரவேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு பெற நடவடிக்கை எடுப்போம்.

இழப்பீட்டை மத்திய அரசு, கர்நாடக அரசிடம் பெற்றுத்தரவேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு பெற நடவடிக்கை எடுப்போம்.

சேலம் : சேலம் மாவட்ட சரக்கு போக்குவரத்தாளர்கள் நலச்சங்கத்தின் 15வது ஆண்டு மகாசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ் பேசியதாவது: கர்நாடகாவில் காவிரி தண்ணீர் பிரச்னைக்காக நடந்த வன்முறையில், சேலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஆம்னி பஸ்கள், சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 20 லாரிகள் எரிக்கப்பட்டது. இதற்கான இழப்பீட்டை மத்திய அரசு, கர்நாடக அரசிடம் பெற்றுத்தரவேண்டும். இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு பெற நடவடிக்கை எடுப்போம். கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து 16ம் தேதி (இன்று) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தனராஜ் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>