மத்திய அரசின் உத்தரவாதத்தால் பலனில்லை : தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இலங்கை

 மத்திய அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 11 நாட்களுக்கு பின் மீன்படிக்கச் சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 11 நாட்களுக்கு பின் மீன்படிக்கச் சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

.

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவ கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 11 நாட்களுக்கு பின் மீன்படிக்கச் சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீண்டும் விரட்டியடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். கச்சத்தீவின் அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை ரோந்து படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசியும், தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிக்க இயலாமல் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரிடன் அட்டூழியம் தொடர்வது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த இளம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 11 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் பேச்சு நடத்திய மத்திய அரசு, இலங்கை கடற்படையினர் இனி தாக்குதல் நடத்த மாட்டார்கள் என உறுதியளித்தது. ஆனால் மத்திய அரசின் உத்தரவாதத்திற்கு பிறகும் இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>