மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல்

 தோள் சீலை போராட்டத்தில் வைகுண்டரின் போராட்டம் மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதுவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

தோள் சீலை போராட்டத்தில் வைகுண்டரின் போராட்டம் மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதுவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

புதுடெல்லி

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று நாடார் சங்கங்களின் கூட்டமைப்பினர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியிடம் வலியுறுத்தினர். அப்போது பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் உடன் இருந்தார்.

நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரவீந்திரன் துரைசாமி, சங்கம் செல்வராஜ், ராஜ்குமார், முத்துக்குமார், கணேசன், கண்ணன், வடப்பாடி ராதாகிருஷ்ணன், சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர். அப்போது தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பு முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இன்று தமிழகத்தில் பலரும் படித்து முன்னேறி நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்றால், அதற்கு அன்று பெருந்தலைவர் காமராஜர் கொடுத்த மதிய உணவு திட்டம்தான் காரணம். எனவே, அரசின் மதிய உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்டவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சதானந்த கவுடாவிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறோம்.

மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மனு அளித்தோம். பாடப்புத்தகங்களில் சில வாசகங்கள் பெருந்தலைவருக்கு மதிப்பு கூட்டுவதாக இல்லை. பாடப்புத்தகங்களில் வரலாறு பல இடங்களில் திரித்து கூறப்பட்டுள்ளதை மாற்ற வேண்டும் என்பதும் எங்கள் புதிய கல்வி திட்டத்தின் நோக்கம்.

யாருடைய சரித்திரமும் இருட்டடிப்பு செய்யாத வண்ணம் பார்த்துக்கொள்வதில் பாரதீய ஜனதா கட்சி மிகத் தெளிவாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை பற்றி வைகோ ஏதாவது கூற வேண்டும் என்றால் அதற்கு தொடர்புடைய இணையதளத்தில் பதிவு செய்யட்டும். செப்டம்பர் 15–ந் தேதி வரை இதற்கான நேரம் இருக்கிறது என்பதை அவருக்கு தெளிவுபடுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவறான பதிவை நீக்க வேண்டும்
இந்த சந்திப்பு குறித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதி ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது:–

சி.பி.எஸ்.இ. 9–ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார்கள் என்று அழைக்கப்படும் ‘சாணார்கள்’ நிலச்சுவான்தார்களான நாயர்களின் கீழ் பணிபுரிவதற்காக தென் திருவிதாங்கூருக்கு இடம் பெயர்ந்தனர் என்று அந்த பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

70 சதவீதம் உள்ள அந்த சமூகம் நிச்சயமாக அப்படி இருந்திருக்க முடியாது. அந்த தவறான பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும் தோள் சீலை போராட்டத்தில் வைகுண்டரின் போராட்டம் மத்திய அரசின் பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதுவும் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>