மதிப்பீடு முறை அமலாகிறது 6 முதல் 9ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ தேர்வு மாற்றம்

class_room_2928777_2929363f

புதுடெல்லி : சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை நடைபெறும் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது மதிப்பீடு முறை அமல்படுத்தப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தரத்தை உயர்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக மீண்டும் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 முதல் 9ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தற்போது தொடர்ச்சியான விரிவான மதிப்பீடு திட்டம் அமலில் உள்ளது. இந்த தேர்வு முறை கடந்த 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பொது மதிப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள தேர்வு திட்டப்படி 60 சதவீத மதிப்பீடு தேர்வு முறையிலும், 40 சதவீத மதிப்பீடு ஆண்டு முழுவதும் மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடிப்படையில் ஆசிரியர் வழங்குவதாகவும் உள்ளது. புதிய திட்டப்படி தேர்வு அடிப்படையில் 90 சதவீத மதிப்பீடு வழங்கப்படும். இதில் அரையாண்டு அல்லது ஆண்டு இறுதி தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டு கால மதிப்பீட்டின்படி ஒவ்வொரு காலத்திற்கும் தலா 10 மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>