மதம் மாறிய பெண் தந்தையின் சொத்தில் பங்கு

PicsArt_06-07-10.36.49

புதுடெல்லி: இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியதை காரணம் காட்டி தந்தையின் சொத்தில் பங்கு தர மறுக்கும் சகோதரர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 33 வயது பெண் தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், முஸ்லிம் மதத்துக்கு மாறி அந்த மதத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எனது தந்தைக்கு சொந்தமான ₹20 லட்சம் மதிப்புள்ள நிலம், கிழக்கு டெல்லியின் அசோக் நகர் பகுதியில் உள்ளது. இந்த சொத்து எனது இரு சகோதரர்கள் உட்பட எங்கள் மூவருக்கும் சொந்தமானது. இதனிடையே, எனது தாய் மற்றும் தந்தை முறையே கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டில் இறந்துவிட்டனர். இந்நிலையில், என்னை சப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிலத்தை மூன்று பேருக்கும் பிரித்து தருவதாக கூறி எனது சகோதரர்கள் கையெழுத்திட கோரினர். அதனை நம்பி கையெழுத்திட்டேன். அதன்பின் அந்த நிலத்தில் குடியிருந்தவர்கள் மூலம் எனக்கு வாடகை வந்து கொண்டு இருந்தது. ஆனால், சமீபகாலமாக அந்த தொகை தருவதை நிறுத்தி விட்டனர். விசாரித்ததில் என்னை ஏமாற்றி உண்மையை மறைத்து அந்த நிலத்தை சகோதர்கள் இருவரும் விற்க முயன்றுள்ளனர்.

இதையறிந்து சகோதரர்களிடம் சென்று கேட்டபோது, நான் இந்துவாக இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டதால் இந்து சட்டப்படி தந்தையின் சொத்தில் பங்கு கேட்க உரிமையில்லை எனக் கூறி தர மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு சேர வேண்டிய பங்கை சகோதரர்களிடமிருந்து பெற்று தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி ரவீந்தர் சிங், இந்த வழக்கை ஆகஸ்டு 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதுதவிர, பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரர்கள் மீது ஏமாற்றுதல், சதி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கார்கார்டூமா நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கை ஒன்றையும் தொடர்ந்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>