மஞ்சுவாரியாருக்கு முன்பே உறவுப் பெண்ணை ரகசிய திருமணம் செய்த நடிகர் திலீப்?

201708031402355593_Who-is-Dileeps-first-wife-Kerala-police-dial-Gulf-number_SECVPF

நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் நடிகர் திலீப் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நடிகர் திலீப்பின் வாழ்க்கை பற்றிய பல்வேறு ரகசியங்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர் நடிகை மஞ்சுவாரியாரை திருமணம் செய்வதற்கு முன்பே உறவுப்பெண் ஒருவரை ரகசிய திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடிகர் திலீப் பதிவு செய்துள்ளார்.

அதன்பிறகு சினிமா உலகில் நுழைந்து மஞ்சுவாரியாருடன் அவருக்கு காதல் மலர்ந்ததும் முதல் மனைவியை அவரது உறவினர்கள் உஷார்படுத்தினர். ஆனால் அவர்களை திலீப் சமரசம் செய்தார்.

பின்னர் மஞ்சுவாரியாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது மஞ்சுவாரியார் மலையாள சினிமா உலகில் உச்சத்தில் இருந்தார். அவரை திருமணம் செய்து கொண்டதும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டஉறவுப்பெண்ணை வளைகுடா நாடு ஒன்றுக்கு அனுப்பி விட்டதாக தெரிகிறது. திலீப்பின் கடந்த கால வாழ்க்கை பற்றி விசாரித்தபோது இதை அறிந்த போலீசார் திலீப்புக்கு நடந்த முதல் திருமணம் நடந்த பதிவு அலுவலகம் மற்றும் அதற்கான ஆவணங்களை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திலீப்பின் சொந்த ஊரான ஆலுவா, தேசம் பத்திரபதிவு அலுவலகத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது

மேலும் வளைகுடா நாட்டில் உள்ள திலீப்பின் முதல் மனைவியையும் கண்டுபிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மஞ்சுவாரியாரை திருமணம் செய்த பின்னரும் உறவுக்கார பெண்ணுடன் திலீப் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். எனவே உறவுக்கார பெண்ணை கண்டுபிடித்தால் அவரிடம் திலீப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என போலீசார் கருதுகிறார்கள். இதற்காக அவரை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திலீப் 3-வதாக தான் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>