மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி அழுது நாடகம்: திருநாவுக்கரசர்

2016-14-11-13-35-03nn

சென்னை: மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி அழுது நாடகம் ஆடுகிறார் என்று சென்னையில் நேரு சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர், எங்களை சாகடிக்காதீர்கள் என்றுதான் மத்திய பாஜக அரசை பார்த்து மக்கள் சொல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் வங்கி வாசலில் வெயிலில் நின்று மயங்கி விழுந்து மக்கள் சாகிறார்கள்.

நாட்டு மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பத்துக்கு பிரதமர் நரேந்தி மோடிதான் காரணம் என்றும் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 1,000 ரூபாயை ஒழித்து ரூ.2,000 கொடுத்தால் கறுப்புப் பணம் ஒழியாது என்று திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். 2,000 ரூபாய் வேண்டும் என்று பொதுமக்கள் யாராவது மத்திய அரசிடம் கேட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

2,000 ரூபாயை வைத்துக் கொண்டு சில்லரை இன்றி மக்கள் பசியும் பட்டினியுமாக அலைகின்றனர். ரூ.2,000 வைத்துக்கொண்டு டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் வேதனைப்படுகின்றனர். 100 ரூபாய் சில்லறை கிடைக்காமல் அனைவரும் அவதிப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

2016-14-11-13-53-41fr

ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பால் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என குஷ்பு தெரிவித்துள்ளார். 50 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று மோடி அறிவித்திருப்பதால் மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர் என குஷ்பு தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வாங்காததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>